உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

அங்ஙனங்

3

205

இருத்தல் வேண்டுமெனக் குறித்த தமது கருத்துக்கு மாறாகமற் றனியடியாரையெல்லாம் ஒரு வரிசைப் பட வத்தற் பொருட்டும், அவருள்ளுந் தில்லையம்பதிக்கண் உள்ள தனியடியாரான திருநீலகண்ட நாயனாரை அத் தனியடியார் வரிசையில் முதல் நிறுத்துதற் பொருட்டுமே யாமென்பது கொள்ளல்வேண்டும். கொள்வுழியுந், தில்லைவாழந்தணர்க்குப்பின் ஒன்பதாஞ் செய்யுளிறுதிகாறுங் கூறப்பட்ட அடியா ரத்தனை பேருந் தனியடியாரே யாவரெனவும், அதனால் அவ்வரிசையினிடைப்பட்ட பொய்யடிமையில்லாத புலவருந் தனியடியாரே யாவரெனவுங் கொள்ளும் எமது கோட்பாடே நிலைபெறுதல் காண்க.

அற்றன்று, தில்லைக்கண் வாழ்வாராயினுங் குயவர் னத்திற் சேர்ந்த திருநீலகண்ட நாயனாரிலும், அந்தண வகுப்பினராகிய தில்லைவாழந்தணர் சிறந்தமையிற் சுந்தரமூர்த்திகள் அவரையே முதற்கண் வைத்து ஓதுவாரா யினரெனின்; நன்று சொன்னாய், அடியாருள் இன்னவர் உயர்குலத்தார், இன்னவர் இழிகுலத்தார் எனப் பிறப்பு வேற்றுமை பற்றிய உயர்விழிவுகளை ஒருசிறிதுங் கருதாது, தாம் அந்தண குலத்திற் பிறந்தவராயிருந்துஞ் சுந்தர மூர்த்திகள் அவ்வடியவ ரெல்லாரையும் ஒத்த சிறப்பினராகவே கருதி, அவரெல்லார்க்குந் தனித்தனியே தாம் அடிமை யாதலை மெய்பெறக் கிளந்தோதி யிருத்தலாலும்; பதியிலார் குலத்து வ வந்தாராகிய பரவை நாச்சியாரையும் வேளாள குலத்திற் பிறந்தாராகிய சங்கிலி நாச்சியாரையும் அவர் திருமணம் புரிந்து சாதிவேற்றுமையின்றி ஒழுகினமை யாலும்; வேளாண் குலத்தின ராகிய ஏயர்கோன கலிக்காம நாயனார் தம்பால் அருவருப்புடையராயிருந்துந் தாம் அவர்பாற் பேரன்பு பூண்டு அவரைக் கண்டு வணங்கச் சென்றமையாலுஞ்; சாதியுயர்வு கருதியே அவர் தில்லை வாழந்தணரை முதற்கணெடுத் துரைத்தா ரென்றற்குத் தினைத்தனைச் சான்றும் அவர் அருளிச்செய்த திருப்பதிகங் களிலாதல் அவர் தம் வாழ்க்கையிலாதல் காணப்பட ாமை யாலும்; அந்தண ரென்னும் உயர்வு பற்றித் தில்லைவாழந் தணரை முதற் கணெடுத் தோதினாரென்னும் அவ்வுரை சுந்தரமூர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/214&oldid=1590842" இலிருந்து மீள்விக்கப்பட்டது