உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் - 24

நாயனார் திருவுளக்கிடைக்கு முற்றும் மாறான அடாத வுரையாமென் றொழிக.

தில்லைவா ழந்தணர்

என்னுஞ் சொற்றொடர் முதல்வனால் எடுத்துக் கொடுக்கப்பட்டதாகாமற் சுந்தரமூர்த்தி களாலேயே அமைக்கப்பட்ட தொன்றாக இருக்குமாயின், தாம் ஓரினப்படக் கூறக் கருதிய தனியடியார் வரிசையினிடையே தொகையடியா ராகிய 'தில்லைவா ழந்தணரைப்" புகுத்தல் முறையாகாமை கண்டே அவரை அவர் அத்தனியடியார் வரிசையினின்றும் வேறாகப் பிரித்தெடுத்து முதற்கண் வைத்து மொழிந்தாரெனக் கோடலே எல்லாவாற்றானும் இயைவதா

மென்று கடைப்பிடிக்க.

எனவே, தனியடியார் வரிசை னிடைப்பட்ட 'பொய்யடிமை யில்லாத புலவர்” என்பார், தமது செந்தமிழ்ப் புலமைத் திறத்தால் 'திருவாசகம்', 'திருச்சிற்றம்பலக் கோவையார்” என்னும் ஒப்புயர்வில்லா முழு மாணிக்கங்களை உலகிருள் இரியவுஞ் சிவவொளி சுடர்ந்து திகழவும் தந்து, அவ்வாற்றால் 'மாணிக்கவாசகர்’ என்னும்

அருமைத் திருப்பெயர் பூண்டு, “உள்ளேன் பிறதெய்வம் உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லா தெங்கள் உத்தமனே” என முழுமுதற் கடவுளாஞ் சிவபெருமான் ஒருவற்கே மெய்யடிமைத் திறம்பேணிய திருவாதவூரடிகளே யாவரல்லாற் பிறராகாமை திண்ணமாமென்று தெளிந்து கொள்க. அச்சொற்றொடர் இவ்வாறு திருவாதவூரடிகளையே யுணர்த்துதல் அறியாராய், அது கபிலர், பரணர் நக்கீரர் முதலான கடைச்சங்கப் புலவரையே குறிக்குமெனக் கூறிய நம்பியாண்டார் நம்பிகள் கூற்றுப் பிழைபடுகின்றமையின், அது கொள்ளற்பால தன்றென விடுக்க. நக்கீரர் முதலான கடைச்சங்கப் ச்சங்கப் புலவர்கள் “பரமனையே பாடுவார்” என்னுந் தாகையடியார் குழாத்துள் அடங்குதலின், அவரையே மீண்டுங் கூறுதல் சுந்தரமூர்த்தி நாயனார்க்குக் கருத்தாகாமை வெள்ளிடை மலைபோல் விளங்கற்பாற்று.

அற்றேல், நம்பியாண்டார் நம்பிகள் திருநாரை யூரின்கண் எழுந்தருளியிருக்கும் பொல்லாப் பிள்ளையார் பால் திருத்தொண்டர் வரலாறுகளைக் கேட்டுணர்ந் தாரெனத் திருமுறைகண்ட புராணங் கூறுதலிற், 'பொய்யடிமை யில்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/215&oldid=1590843" இலிருந்து மீள்விக்கப்பட்டது