உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்”

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

207

என்பதற்கு நம்பியாண்டார் கண்ட பொருள் இறைவனே யுணர்த்திய தொன்றாதல் வேண்டும்; வேண்டவே, நம்பிகள் பிழைபட்டாரென மேலே சொல்லிய குற்றம்

றைவனையுஞ்

சாருமாலெனின்; திருத்தொண்டத் தாகையிற் போந்த அடியாரின் வரலாறுகளை ஒருவர் தெரிதல் வேண்டினாராயின் அவர் தமது காலத்துள்ள கல்வி யறிவுடையார் பலரை வினாவினால் அவை தம்மை நன்கறிந்து கொள்ளலாம். நம்பியாண்டார் நம்பிகள் இருந்த காலத்தில் இச் செந்தமிழ் வளநாடு சேர சோழபாண்டிய ரென்னுந் தமிழ் வேந்தரது ஆட்சிக்கீழதாய்த் தமிழ்க் கல்வியிலும் நாகரிகத்திலும் மிகவுஞ் செழிப்புற்றிருந்தது. சைவ சமய உணர்ச்சியிலும் வைணவ சமய உணர்ச்சியிலும் நிரம்பத் தேர்ந்த நல்லிசைப் புலவர்களும் ஆங்காங்குத் திரள்திரளாய் மலிந்திருந்தனர். பல்வகைக் கலைநூல் அறிவு நூல்களை ஓதுவார் தொகையும் விஞ்சி நின்றது. இவ் வுண்மை, நம்பியாண்டார் நம்பிகளே தாம் அருளிச்செய்த திருஞானசம்பந்தர் திருவுலா மாலையில்,

மறைபயில்வார் மன்னு வியாகரணக் கேள்வித் துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் -முறைமையினால் ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப் போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் - சோகமின்றி நீதி நிலையுணர்வார் நீள்நிலத்துள் ஐம்புலனுங் காதல் விடுதவங்கள் காமுறுவார் - ஆதி அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக் கருங்கலியை நீங்கக் கனல்வகுப்பார் -ஒருங்கிருந்து காமநூல் கேட்பார் கலைஞனங் காதலிப்பார்

ஓமநூல் ஓதுவார் உத்தரிப்பார்

ராரன்றே.நாமிருக்கும்

என்று கூறுமாற்றால் இனிது விளங்காநிற்கும். இத்துணை நூற்பயிற்சியும், அறிவுமிக்கார் குழுவும் மலிந்தோங்கிய காலத்தில் திருத்தொண்டர் வரலாறுகளை அறியாதாரும் இருப்பரோ? இராரன்றே. நாமிருக்கும் இக்காலந் திருத்தெண்ட ரிருந்த காலத்திற்கு ஆயிரமாண்டு பிற்பட்டதாயிருந்துந், திருத்தொண்டர் புராணத்திற் காணப் படாத வரலாறுகள்கூட இன்னும் அறிவுடையார் தமக்குள் வழங்கக் காண்டுமன்றே. இத்துணைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/216&oldid=1590844" இலிருந்து மீள்விக்கப்பட்டது