உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

  • மறைமலையம் - 24

கேட்

பிற்பட்ட காலத்திலேயே அவ் வரலாறுகள் தொடர்ந்து வழங்குமாயின், இற்றைக்குத் தொள்ளாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே அத் திருத் தொண்டரது காலத்திற்கு அண்மை யிலிருந்த நம்பிகள் காலத்தில் அவை யின்னும் எத்துணை மிகுதியாய் வழங்கியிருத்தல் வேண்டும்! ஆதலால், அவை மிக்கு வழங்கிய அப் பழங்காலத்திருந்த நம்பியாண்டார் நம்பிகள் அவ் வரலாறுகளை அஞ்ஞான்றிருந்த சைவசமயச் சான்றோர்பால் னாவியறிந்தாரெனக் கோடலே மெய்ம்மையாகுமன்றிப், பொல்லாப் பிள்ளையார்பால் அவை தம்மைக் வ டுணர்ந்தாரென்றல் வெறும் பொய்க்கதையே யாகுமென்று கடைப்பிடிக்க. நம்பிகள் இருந்த காலத்தில், தமிழ்கற்ற சான்றோருந் தமிழ் நூல்களுந் தமிழ்ப் பயிற்சியும் அறவே யில்லையாயொழியினன்றோ அத்துணை வறும் பாழாய்ப் போன காலத்திற் புதிது தோன்றிய நம்பிகள் ஒருவர்க்குப், பொல்லாப் பிள்ளையாராகிய தெய்வமே அருள்கனிந்து முன்னின்று அவ் வரலாறுகளை அறிவுறுத்திற் றென்றுகோடல் பொருந்தும். அவர் இருந்த அக் காலம் அங்ஙனம் வெறும் பாழாதலின்றிக் கற்றுவல்ல சான்றோர் கூட்டங்களால் நிறைந்துகிடந்தமை நம்பிகள் அருளிச்செய்த பாட்டினாலேயே நன்கு பெறப்படுதலாற், கற்றுவல்ல மக்களறிவினால் ஆகற்பாலனவற்றிற் கெல்லாங் கடவுளை வலிந்திழுத்துக் கட்டிய கதைகள் படுபொய்யெனவே விலக்கற் பாலனவாமென்க. இஞ்ஞான்று நம்மனோரில் அறிவிற் சிறந்தாராலுங் கண்டறியப்படாது மறைந்து கிடந்த நீராவி, மின் என்பவற்றின் ஆற்றல்களை யெல்லாங் கண்டறிந்து, 'இவை தெய்வத்தா லன்றி மக்களாலுஞ் செய்யப்படுமோ! என்று வியக்கத்தக்கவாறான பொறிகளை (இயந்திரங்களை) அமைத்து, அப் பொறிகளில் அவ்வாற்றல்களை யுய்த்துச், செயற்கருஞ் செயல்களை யெல்லாஞ் செய்து போதரும் மேனாட் டறிஞர் தாங்கண்ட நுட்பங்களுக்கெல்லாங் கடவுளை முன்னிழுத்துப் பேசாதிருக்க இந் நுட்பங்களிலும் இவற்றையறியும் அறிவின் திறங்களிலும், எட்டுணை தானும் இலவாய்க், கலைவல்லாரை உசாவிய வளவானே மட்டுங் கடவுளை முன்னிழுத்துப் பேசுதல் பின்னுள்ளோர் கட்டிய வெறும் பொய்க்கதையாவதன்றி மற்றென்னை? ஆகவே 'பொய்யடிமை யில்லாத புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/217&oldid=1590845" இலிருந்து மீள்விக்கப்பட்டது