உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3×

209

என்பதற்கு நம்பிகள் செய்துகொண்ட பொருட்பிழை இறைவனைச் சாருமென்றல் ஆராய்ச்சி யுணர்வில்லார் கூற்றாமென விடுக்க.

அல்லதூஉம், நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் திருவந்தாதி'யை வழிநூலாகக் கொண்டு 'திருத்தொண்டர் புராணம்' என்னும் பெரிய புராணத்தை அருளிச்செய்த ஆசிரியர் சேக்கிழார்,

அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை நந்தம் நாதனாம் நம்பியாண்ட டார்நம்பி புந்தி யாரப் புகன்ற வகையினால்

வந்த வாறு வழாமல் இயம்புவாம்

செய்யுளில்,நம்பிகள்

அடியார்

என்னும் நூற்பாயிரச் வரலாறுகளைப் பொல்லாப் பிள்ளையார்பாற் கேட்டுணர்ந் தாரென உரையாமல் ‘அவர் தமது அறிவினாலேயே நிரம்ப ஆராய்ந்து புகன்றனர்” என்பது போதரப் புந்தியாரப் புகன்ற வகையினால் என்று விளங்க ஓதலின், நம்பிகள் 'பொய்யடிமை யில்லாத புலவர்' என்பதற்குக் கொண்ட பொருள் தம்மறிவிற் பட்டபடி கொண்டதே யல்லாமல் இறைவன் உணர்த்தியபடி யன்றென்பது பின்னும் வலிபெறும். பொல்லாப் பிள்ளையார் நம்பிகட்கு அடியார் வரலாறுகளை யுணர்த்திய துண்மையாயின், அத்துணைச் சிறந்ததோர் அருள்நிகழ்ச்சியைச் சேக்கிழார் சொல்லாது விடார். ஆகவே, அக் கதை சேக்கிழாருக்குப்பின் வந்தாராற் கட்டிவிடப்பட்டதாகு மென்றுணர்ந்து கொள்க.

அற்றேலஃதாக, மேலே காட்டிய செய்யுள் பெரிய புராணத் திருமலைச்சருக்கத்தின் ஈற்றிற் காணப்படு தலானும், அத் திருமலைச்சருக்கஞ் சேக்கிழாரால் இயற்றப் படாமற் பிற்காலத்தவரால் இயற்றிச் சேர்க்கப்பட்டதென நீரே பிறிதோரிடத்துக் கூறுதலானும், அச் செய்யுளை ஈண்டுச் சேக்கிழாரது மொழியாக எடுத்துக் காட்டுதல் நுமது கூற்றுக்கே முரணாம்போலுமெனின்; அற்றன்று; பெரியபுராணம் என்னுஞ் சார்பு நூலுக்கு வழிநூலாவது இதுவெனக் காட்டும்” அந்த மெய்ப்பதிகத் தடியார்களை” என்னுஞ் செய்யுளும், அதற்கு முதனூலாவது இன்னதெனக் காட்டும் “மற்றிதற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/218&oldid=1590847" இலிருந்து மீள்விக்கப்பட்டது