உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

66

மறைமலையம் 24

பதிகம் வன்றொண்டர்தாம்" என்னும் அதற்கு முன்னுள் செய்யுளும் நூற்பாயிரத்திற்கு இன்றியமையாதனவா யிருத்தலின், அவை ஆசிரியர் சேக்கிழாராலேயே செய்யப் பட்டுத், தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும், எய்தவுரை”க்குந் தற்சிறப்புப் பாயிரமாய் நூன்முகத்தே “உலகெலாம்” என்னுஞ் செய்யுள் முதலாக நிற்கும் பகுதியில் நூற்பெயர் கூறுவதாகிய “இங்கிதன் நாமங்கூறின்” என்னுஞ் செய்யுட்குப்பின் நிறுத்தப்பட்டனவாகும். சேக்கிழாருக்குப் பிற்காலத்தே வந்தாரொருவர் 'திருமலைச்சருக்கத்'தைப் புதிதாக இயற்றி அதனைப் பாயிரத்திற்குப்பின்னே சேர்க்கின்றுழித் தமது கருத்துக்கு இசையுமாறு அச்செய்யுட் களிரண்டனையும் பிரித்தெடுத்து அச் சருக்கத்தின் ஈற்றில் வைப்பாராயினரென் றுணர்தல் வேண்டும். இங்ஙனமே 'அநபாய சோழவேந்தன்” சிறப்புக் கூறுவதாகிய “கையின் மான்மழுவர்” என்னு ஞ் செய்யுளுஞ் சேக்கிழாராற் செய்யப்பட்டு 'வெள்ளானைச் சருக்கத்’தில் நின்றதொன்றாகும்; திருமலைச்சருக்கம் பாடிச் சேர்த்த பின்னையோர் தமது கருத்து நிரம்புமாறு அதனையும் ஆண்டுநின்றும் பிரித்தெடுத்து இதன்கட் சேர்க்கலாயினா ரென்பதைச் 'சேக்கிழாரும் பெரிய புராணமும் என்னும் எமதாராய்ச்சியுரையில் விளக்கிக் காட்டினாம்; அது நிற்க.

அவையெல்லாம் ஒக்குமாயினுந், தெய்வத்தன்மை வாய்ந்த நம்பியாண்டார் நம்பிகள் ‘பொய்யடிமை யில்லாத புலவர்' என்பதற்கு மெய்யல்லாப் பொருள்சொல்லிப் பிழைபடுதலுங் கூடுமோவெனின்; நம்பிகள் மெய்க்கல்வி யிலுஞ் சிவபிரான் திருவடிப்பேரன்பிலுஞ் சிவனடியாரன் பின் நிறத்திலுஞ் சிறந்த பெரியாரேயாயினுஞ், சைவ சமயாசிரிய ரோடுஞ் சேக்கிழாரோடும் ஒத்த தெய்வப் பெற்றியுடைய ரல்லர். சைவசமயாசிரியர் நால்வரும் முழுமுதற் கடவுளை நனவிலேயே நேரே கண்டவர்; கடவுளின் திருவருட்டுணை கொண்டு எவராலுஞ் செயலாகா அரும்பெரும் புதுமைகளை நிகழ்த்தி முழுமுதற் பெரும்பொருளின் உண்மையை நாட்டினவர்; சேக்கிழாரோ இறைவனே தமக்கு “உலகெலாம்” என முதலெடுத்துக் கொடுக்கத் தாம் திருத்தொண்டர் புராணம் பாடத் துவங்கினமையைத் தாமே நூற்பாயிரத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/219&oldid=1590848" இலிருந்து மீள்விக்கப்பட்டது