உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் “வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறிய பொருளின் ஆகு மெனப்புகல் வாமன்றே”

மொழிந்திருத்தலின்

பெற்றியுடையாரென்பது

3

211

அவருந்

தெய்வப்

துணியப்படும்.

நம்பிகளும்

இவரையொத்த தெய்வப் பெற்றியுடையாரெனக் கோடற்குச் சான்று ஏதும் இன்மையின், அவர் ஒரோவழிப் பிழைபடுதலும் இயற்கையேயாம். எத்துணைப் பெரியாரும் பிழைபடுதலுண் டன்பது தெருட்டுதற்கென்றே தெய்வத் திருவள்ளுவர்,

"அரியகற்று ஆற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை யரிதே வெளிறு’"

என்று அருளிச் செய்வாராயினரென்பது.

அற்றாயினும், உமாபதிசிவாசாரியர் தாம் இயற்றிய திருமுறைகண்ட புராணத்'தில், நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய புதுமைகளை

பொல்லாப்பிள்ளையாரால்

எடுத்துக்காட்டி, அவர் தெய்வப்பெற்றியினரென்பது தேற்றினாராலெனின், நம்பிகள் பொல்லாப்பிள்ளையாரைக் கொண்டு மிக வியத்தகு நிகழ்ச்சிகளை விளைவித்தது உண்மையாயின், அவர் தாமியற்றிய 'திருநாரையூர் விநாயகப் பிள்ளையார் திருவிரட்டைமாலை'யிலாதல் ஏனைத் தம் பாடல்களிலாதல் அதனைச் சிறிதாயினுங் குறித்திருப்பர். என்னை? சமயாசிரியர்க்கு நிகழ்ந்த வியத்தகு அருள் நிகழ்ச்சிகள் அவர் தம் பாடல்களில் ஆங்காங்குக் குறிக்கப்பட்டிருத்தல் காண்டுமாகலின். மற்று, நம்பிகள் அருளிச்செய்த நூல்களில் அத்தகைய குறிப்பொன்றுங் காணப்படாமையானும், அவரது காலத்தை யடுத்து வந்த ஆசிரியர் சேக்கிழார்,நம்பிகள் பொருட்டு நிகழ்ந்தனவாகச் சொல்லப்படும் அருள்நிகழ்ச்சி களை ஒரு தினைத்தனை தானுங் குறிப்பிடக் காணாமையானும் ஏதொரு சான்று மின்றி அவைகளை வெறுங்கதையாகச் சொல்லுந் 'திருமுறைகண்ட புராணம்' நுண்ணிய உண்மை யாராய்ச்சியில் தலைநின்றவருஞ் சைவசித்தாந்த ஆசிரியரில் நாலாம் எண்ணுமுறைமைக்கண் நின்றவருமான ‘உமாபதி சிவாசிரியர்' செய்ததாகாது; அவர் பயர் தாங்கிய வேறெவரோ ஒருவர் செய்ததாகல் வேண்டும். இதற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/220&oldid=1590849" இலிருந்து மீள்விக்கப்பட்டது