உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

283

திருக்குறுக்கை வீரட்டத்திருப்பதிகம், 9 ஆஞ் செய்யுளிலுங் கணம்புல்ல நாயனார் இரண்டுமுறை சுட்டப்பட்டிருக்கின்றார். திருப்பழனத் திருப்பதிகம், 10 ஆஞ் செய்யுளில் அப்பூதி நாயனார் ஒரே ஒருமுறை சொல்லப்பட்டிருக்கின்றார். திருவாரூர்த் திருவிருத்தம் "வேம்பினைப் பேசி” என்பதன்கண் நமிநந்தியடிகள் ஒரேமுறை குறிப்பிடப் பட்டிருக்கின்றார். ஆக அப்பரது தேவாரத்தின்கட் குறிக்கப்பட்ட நாயன்மார்கள்: கண்ணப்பர், கோச்செங்கட்சோழர், சண்டீசர், சாக்கியர், கணம்புல்லர், அப்பூதி, நமி நந்தியடிகள் என்னும் எழுவருந், திருஞான சம்பந்தப் பெருமானும் என எண்மர் ஆவர்.

இனி, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களுட் குறிப்பிடப்பட்ட திருத்தொண்டர் இத்துணையரென்பதனை ஆராய்வாம். திருப்பிரமபுரம், “ஈண்டுதுயிலமர்” என்னுந் திருப்பதிகத் திலுந், திருவானைக்காத் திருப்பதிகம், 3ஆம் பத்தின்7 ஆஞ்செய்யுளிலும், திருக்காளத்தித் திருப்பதிகம் 2 ஆம் பத்தின் 4ஆஞ் செய்யுளிலுந், தென்குடித் திட்டைப் பதிகம் 7 ஆஞ் செய்யுளிலுங் கண்ணப்பர் நான்கு முறை சுட்டப்பட்டிருக் கின்றார். திருச்சேய்ஞலூர்த் திருப்பதிகம் 6 ஆம் பாட்டிலுந், திருவானைக்காத் திருப்பதிகம், முதற்பத்தின் 5ஆஞ் செய்யுளிலுந், திருவைகன்மாடக் கோயிற் பதிகம், 2,4 ஆம் பாட்டுக்களிலுந், திருவம்பர்ப் பெருந் திருக்கோயிற்பதிகம், 1, 2, 5 ஆம் பாட்டுக்களிலுந் திருவரிசிற்கரைப்புத்தூர்ப் பதிகத்தின் 7 ஆம் பாட்டிலுந், திருத்தண்டலை நீணெறிப் பதிகம், 6 ஆம் பாட்டிலுங் கோச்செங்கட்சோழர் ஆறுமுறை கூறப்பட்டிருக் கின்றார். திருச்சேய்ஞலூர்ப்பதிகம், 7ஆம் செய்யுளிலுந், திருக்கோளிலிப்பதிகம், 4ஆஞ் செய்யுளிலுந், திருவாலவாய் ஆலநீழலுகந்த" என்னும் ப என்னும் பதிகம் 5ஆஞ் செய்யுளிலுந், திருக்கயிலாயப் பதிகம் 2ஆம் பத்தின் 10ஆஞ் செய்யுளிலுஞ் சண்டீசர் நான்குமுறை குறிப்பிடப் பட்டுள்ளார். திருக்கலிக்காமூர்ப் பதிகம், 7ஆஞ் செய்யுளிற் குங்குலியக்கலயர் ஒருகாற் குறிக்கப்பட்டிருக்கின்றார். திருவரிசிற்கரைப் புத்தூர்ப் பதிகம் 7ஆஞ் செய்யுளிற் புகழ்த்துணையார் ஒருகாற் சொல்லப்பட்டுள்ளார்.

திருப்பதிகங்களுட்குறிப்பிடப்பட்

66

L

திருச்செங்காட்டாங்குடித்

திருப்பதிகத்திற் சிறுத்தொண்டர் குறித்துச் சொல்லப்பட் டிருக்கின்றார். திருச்சாத்தமங்கைத் திருப்பதிகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/292&oldid=1590923" இலிருந்து மீள்விக்கப்பட்டது