உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மறைமலையம் - 24

திருநீலநக்கர் கூறப்பட்டுள்ளார். திருக் கோளிலிப்பதிகத்தில் நமிநந்தியடிகள் சுட்டப்பட்டிருக் கின்றார். திருவாலவாய் "மானி னேர்விழி மாதராய்" என்னுந் திருப்பதிகத்திலும், “மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை” என்னும் பதிகத்திலும் மங்கையர்க்கரசியார் இருகாற் சொல்லப்பட்டிருப்பதோடு, பிற்பதிகத்தின் 2ஆஞ் செய்யுளிற் குலச்சிறையாரும் ஒருங்குவைத் துரைக்கப் பட்டிருக்கின்றார். திருவாலவாய் “மந்திரமாவது நீறு” என்னுந் திருப்பதிகத்தின் ஈற்றில் நின்றசீர் நெடுமாறர் குறித்துரைக்கப் பட்டிருக்கின்றார். ஆகத், திருஞான சம்பந்தரது தேவாரத்திற் குறிப்பிடப்பட்ட திருத்தொண்டர்: கண்ணப்பர், கோச்செங்கட்சோழர், சண்டீசர், குங்குலியக் கலயர், புகழ்த்துணையார், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், நமிநத்தியடிகள், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், நின்றசீர் நெடுமாறர் எனப் பதினொருவர் ஆவர்.

எனவே, அப்பர் சம்பந்தர் என்னும் இருவராலுந் தம்முடைய தேவாரத் திருப்பதிகங்களில் ஆங்காங்கு எடுத்துச் சொல்லப்பட்ட நாயன்மார்கள்; கண்ணப்பர், கோச்செங்கட் சோழர், சண்டீசர், சாக்கியர், கணம்புல்லர், அப்பூதி, நமிநந்தியடிகள், குங்குலியக்கலயர், புகழ்த் துணையார், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், மங்கையர்க் கரசியார், குலச்சிறையார், நின்றசீர் நெடுமாறர் எனப் பதினால்வர் ஆவர். இந்நாயன்மார் பதினால்வரிற் பலர், சம்பந்தர் அப்பர் இருந்த கி.பி.ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருந்தோராக ஏனைச் சிலரோ ஆறாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட காலத்தே இருந்தோராவர். அப்பர் சம்பந்தராற் குறித்தருளிச் செய்யப்பட்ட இந்நாயன்மார் பதினால்வரிற் கண்ணப்பர், சண்டீசர் என்னும் இருவரைத் தவிர ஏனையோரை மாணிக்கவாசகப் குறிப்பிடாமை என்னையென்று ஆழ்ந்து ஆராயவல்லார்க்கு, அவர் கண்ணப்பர், சண்டீசர் என்னும்இருவர்க்குப் பின்னும், ஏனையோர்க்கு முன்னும் இருந்தாரென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதின் விளங்குமன்றோ?

பருமான்

இனிக், கி.பி. ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இயற்றப்பட்ட‘கல்லாட’ நூலின் ஆசிரியர் சிவபிரான் மாட்டுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/293&oldid=1590924" இலிருந்து மீள்விக்கப்பட்டது