உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

3

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

285

சிவனடியார் மாட்டும் பெருகிய மெய்யன் புடையராகலின், அவராற் குறிக்கப்பட்ட நாயன்மார் இனையரென்பதூஉஞ் சிறிது ஆராய்வாம். கல்லாட நூலின் 15, 57, 6, 78, 101 ஆம் பாட்டுக்களில் முறையே கண்ணப்பநாயனார், மூர்த்திநாயனார், சாக்கிய நாயனார், காரைக்காற் பேயம்மையார் என்னும் நால்வர் மாட்சியினை வியந்தெடுத்துப்பாடின ஆசிரியர், ஒரு சிலரையேனும் எடுத்துக்

ஏனைநாயன்மாரில்

கூறாதுவிட்டதென்னையென ஆராயுங்கால், இந் நாயன்மார் நால்வரும் ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தாற்போல ஏனையோர் இல்லாமை பற்றியே யாமென்பது நன்குவிளங்கும். இந் நால்வரிற் பின் மூவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தா ராகற்பாலராகலின், இம் மூவரைக் கூறாத மாணிக்கவாசகர், ஐந்தாம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவராதல் தெளியப்படும். துவேயுமன்றி, இவ்வாசிரியர் 44ஆஞ் செய்யுளில்,

வெடிவாற் பைங்கட் குறுநரி யினத்தினை ஏழிடந் தோன்றி இன்னூற் கியைந்து வீதி போகிய வாலுளைப் புரவி

ஆக்கிய விஞ்சைப் பிறைமுடி யந்தணன்

எனவும், 98 ஆஞ் செய்யுளிற்,

கூடற் பதிவரும் ஆடற் பரியோன்

எனவும், மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் 'நரிபரி யாக்கிய” திருவிளையாடலையும், 46 ஆஞ் செய்யுளில்,

மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக் கூலஞ் சுமக்கக் கொற்றா ளாகி

நரைத்தலை முதியோள் இடித்தடு கூலிகொண்டு கோமகன் அடிக்க அவனடி வாங்கி

எவ்வுயிர் எவ்வுலகு எத்துறைக் கெல்லாம்

அவ்வடி கொடுத்த அருள்நிறை நாயகன்

எனப் பிட்டுவாணிச்சி பொருட்டு 'மண்சுமந்த’ திருவிளை யாடலையும் நன்கெடுத்து மொழிதலானும், இவ்விருவேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏதுவாய்நின்ற மாணிக்க வாசகர் ஐந்தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/294&oldid=1590925" இலிருந்து மீள்விக்கப்பட்டது