உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மறைமலையம் - 24

நூற்றாண்டிற்கும் முன்னே கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் திகழ்ந்தமை இனிது விளங்காநிற்குமென்பது.

என்றித்துணைப் பல்வேறு வகையாலும் உண்மைச் சான்றுகள் என்னும் மணிக்கற்கள் கொண்டு அடிப்படை கோலி, அவற்றின்மேல் எழுப்பிய மாணிக்கவாசகர் காலம் என்னும் விழுமிய மெய்ம்மணிக்கோயில் கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி முதற் றிகழ்ந்து, சைவ மெய்ச் சமயத் தெய்வமுஞ் செந்தமிழ்த் தெய்வத் தனிமகளும் ஒருங்குகூடி மெய்யறிவுச் செங்கோலொளியரசு நடாத்தும் மாப்பெரு நிலையமாய் நிலைபேறுற்று நிலவுவதாமென்க.

‘மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்' என்னும் இச்செந்தமிழ்த் தனிப்பேர் ஆராய்ச்சி நூல்,தொண்டை நாட்டுப் பல்லவபுரத்துத் தமது பொதுநிலைக் கழகத் திருமாளிகையில் நாகைகிழார் இயற்றப்பட்டது. ஓம்சிவம்.

மறைமலையடிகளால்

அடிக்குறிப்பு

1.

Dr. Bhandarkarkar's Vaishnavism, Saivism, p.147. fol.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/295&oldid=1590926" இலிருந்து மீள்விக்கப்பட்டது