உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

மாணிக்கவாசகர் காலம்

முதற்பகுதி

சைவ சமயாசிரியருள் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள் இருந்த காலம் உறுதிப்படுத்தற் பொருட்டுத் தமிழ் ஆங்கில மொழிவல்லார் ஆங்காங்கு ஆராய்ந்தெழுதி வருகின்றார். அவருள், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் என்பார் அம்மொழி பெயர்ப்பின் முதலிலே சேர்த்திருக்கும் பொருட்குறிப் பொன்றில், மாணிக்கவாசக சுவாமிகள் காலம் இனிது துணியப்படவில்லை யாயினும், அவர்காலம் கிறிஸ்து பிறந்த பத்தாம் நூற்றாண்டின் தாடக்கத்திலேயேயா மென்று கோடல் உத்திக்குப் பொருத்தமாவ தொன்றென்றுரை கூறுகின்றார். இனி இவர் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு கழிந்து ஞானசம்பந்தர் முதலான மற்றை ஆசிரியர் தோன்றினாரென்றும் உரைப்பாராயினார்.

இனி, மாணிக்கவாசகர் காலம்

உறுதிப்படுத்தற்

பொருட்டு ஆங்கில மொழியில் ஒரு நூலெழுதிய திருமலைக் கொழுந்து பிள்ளையவர்கள், மாணிக்கவாசகர் கடைச் சங்கம் நிலைபெற்று விளங்கியஞான் றிருந்தாரெனவும், அக்கடைச் சங்கத்தில் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் தமது நூலை அரங்கேற்றிய காலம் கிறிஸ்து பிறந்த முதனூற் றாண்டாகலான் மாணிக்கவாசகர் காலமும் அந் நூலரங்கேறிய காலத்திற்குச் சிறிது பின்னாவதாமெனவும் சில பல சான்றுகள் காட்டித் தம்முரை நிறுத்துகின்றார்.

இனி, ஆங்கில மகனான இன்ஸ் என்பார் ஏஷியாடிக் குவார்டர்லி ரிவியூ என்னும் பத்திரிகையில் சுந்தரம் பிள்ளையவர்கள் சிறந்த வாராய்ச்சி செய்து கி.பி. ஏழாவது நூற்றாண்டின் றொடக்கத்திலே யாமென்று துணிந்துரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/296&oldid=1590927" இலிருந்து மீள்விக்கப்பட்டது