உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மறைமலையம் - 24

நிறுத்திய ஞானசம்பந்தர் காலத்தை உடன்பட்டு, ஞானசம்பந்தப் பிள்ளையாராதல் அவரோ டுடனிருந்த அப்பர் சுவாமிகளாதல் அவர்க்குப் பின்னிருந்த சுந்தர மூர்த்திகளாதல் மாணிக்கவாசகரைத் தம் திருப்பதிகங்களுட் குறிப்பிடாமை யானே, மாணிக்கவாசகர் காலம் அச் சைவசமயாசிரியர் மூவர்க்கும் பின்னதாதல் துணியப் படுமெனக் கொண்டு சில மொழிந்திட்டார்

இனிச், சுந்தரம் பிள்ளையவர்கள் ஞானசம்பந்தப் பிள்ளையார் காலம் உறுதிசெய்து ஆங்கில மொழியிலெழுதிய மிக அரியதோ ருரைநூலில் மாணிக்கவாசகர் காலம் பற்றிச் சிறப்பாய் ஏதுமெடுத்து மொழிந்ததில்லை யாயினும், அந் நூன் முகவுரையில் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு முன்னிருந்தா ரென்பதன்கண் தமக்கு ஐயம் ம் நிகழா

நிற்கின்றதென ஓருரை குறித்துப் போயினார்.

இனிச், சரிதவாராய்ச்சியின் நுட்பமும், அதனை ஆயும் முறையும் அறியமாட்டாத தமிழ் ஒன்றே வல்லார் சிலர் ஞானசம்பந்தப் பிள்ளையார் நாலாயிர ஆண்டுகட்கு முன்னிருந்தா ரெனவும், மாணிக்கவாசகர் அப் பிள்ளை யார்க்கும் முன்னிருந்தா ரெனவுந், தமக்குத் தோன்றியவாறே கூறி நெகிழ்ந்துபோய் உண்மை காணாது ஒழிவர். இது நிற்க.

இனி மேலே காட்டிய நால்வர் கருத்துக்களும் ஒன்றோ டொன்று பெரிதும் மாறுபட்டு மயங்கிக்கிடத்தலான், அவற்றைப் புடைபடவொற்றி யளந்தாய்ந்து யாம் எம்மறிவில் மெய்யெனக் கண்டவற்றை ஈண்டுத் தந்து காட்டுவாம்.

முதன் மொழிந்த போப்புத்துரை, மாணிக்கவாசகர் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் றொடக்கத்திலே யிருந்தா ரெனவும், அவர்க்குப் பின் ஒரு நூற்றாண்டு கழிந்து பதினோராவது நூற்றாண்டில் ஞானசம்பந்தப் பிள்ளையார் தோன்றினா ரெனவுஞ் சரிதவரம்பின் நில்லாது அதனியல் வழுவ தமக்குத் தோன்றியவாறே பெரிதும் பிழைபடக் கூறினார். சரிதவாராய்ச்சியின் மிக்குப் புலமையுடைய ஆங்கில இனத்திற் பிறந்து அவ்வாங்கில மொழிப் புலமையும் பெற்றுள்ள இத்துரை மகனார் தாமங்ஙனங் கால உறுதி செய்தற்கேற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/297&oldid=1590928" இலிருந்து மீள்விக்கப்பட்டது