உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 *

289

ஏதுக்கள் நன்கெடுத்து மொழிந்திடாமற் சரிதவியல் பிறழத் தமக்கு வேண்டியவாறே கூறியது பற்றிப் பெரிதும் வியப்படைகின்றாம். சரிதவாராய்ச்சி யின்னதென் றறியமாட்டாத தமிழ்ப் புலவர் அங்ஙனங் கூறினாராயின், அஃது அவர்க் கிழுக்கன்றாம். அவ்வாராய்ச்சியில் முதிர்ந்த வுணர்ச்சி யுடையரான ஆங்கில மக்களே அங்ஙனம் பிறழ வுரையாடுவராயின் அது பற்றி யுலகம் அவரைப் பழியாதொழியுமோ? இதுநிற்க. டாக்டர் ஹூல்ஸ் முதலான ங்கிலப் புலவரால் வெளியிடப் பட்டுவருந் தென்னாட்டுக் கல்வெட்டுப் பட்டையங்களானே, தேவாரத்திருமுறை வகுப்புச் செய்த நம்பியாண்டார் நம்பியோ டொருங்கிருந்த இராசராச அபயகுல சேகரசோழன் அரியணை வீற்றிருப்புப் பெற்றுச் செங்கோலோச்சி உலகு புரந்தருளத் தொடங்கிய ஆண்டு கி.பி. 984 ஆகும். வெங்கையரவர்களும் சென்னைக் கிறித்தவன் கலாசாலைப் பத்திரத்தில் அவ்வரசன் காலம் அவ்வாறாதல் சான்றுகள் பல காட்டி மிக நுட்பமாக விரித்துரைத்து நிறுத்தினார். சுந்தரம் பிள்ளையவர்களும் அக் காலவளவையை நன்காராய்ந்து பார்த்து அது பொருத்தமாவதே யாமென்று ஒருப்பட்டுத் தழுவிக் கொண்டார். ஆங்கில வித்துவான்கள் பிறரும் அதன்கண் ஐயுறவுகொள்ள இடம்பெறுகின்றிலர். இங்ஙனமெல்லாரும் ஒருங்கே தழீஇக்கொண்டு நிறுத்திய இராசராச சோழன் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டி ன் இறுதிக்கண்ண தாதல் இனிது விளங்குதலின், அவ்வரசன் காலத்தே முறைவகுப்புச் செய்யப்பட்டுப் பெரிதும் பெருமையுற்று வழங்கிய தேவாரப் பதிகங்களும் அவற்றை உலகுய்ய மொழிந்தருளிய குரவரும் அப் பத்தாம் நூற்றாண்டிற்கு முன் நிலவியவாறு மலைவின்றித்

துணியற்பாற்று.

6

இனி அச் சமயகுரவன்மா ருள்ளுஞ் சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் கண்ணதா மென்று கோடுமாயினும், அச் சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் நன்கெடுத்து மொழிந்திடப்பட்ட திருஞான சம்பந்த சுவாமிகள் காலம் எட்டாம் நூற்றாண்டாகவாதல் ஏழாம் நூற்றாண்டாகவாதல் கொள்ளற்பாற்றென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/298&oldid=1590929" இலிருந்து மீள்விக்கப்பட்டது