உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

  • மறைமலையம் - 24

சொல்லாமலே விளங்கும். இங்ஙனஞ் சொல்லுதற்குப் பெரிதும் வாய்ப்புடைய ஞானசம்பந்தப் பிள்ளையார் காலவளவை குறித்துரையாட மாட்டாமன் மற்று அது பதினோராம் நூற்றாண்டின் கண்ணதாமென்று கூறிய போப்புத்துரை கூற்றுப் பிழையுடைத்தாதல் தெற்றென விளங்கும். அல்லதூஉம், திருமுறை வகுத்திட்ட நம்பியாண்டார் நம்பிகளும், அத் திருமுறைகளை யருளிச்செய்த சமயகுரவரும், அவருள்ளும் சுந்தரர்க்கு முன்னிருந்த பிள்ளையாரும் எல்லாம் பதினோராம் நூற்றாண்டின் கணிருந்தாரென்று கோடல் உண்மைச் சரிதவாராய்ச்சிக்கு ஒரு சிறிதும் இசையாது. ஞானசம்பந்தப் பிள்ளையார் காலம் ஏழல்ல தெட்டாம் நூற்றாண்டு ஒன்றன்கட் படுவதன்றி இரண்டினும் ஒப்பச்சேறல் ாமையான்,அக் காலவரையறைதான் யாதென்றறிய வேண்டுவார்க்கு அது காட்டுவாம்.

கூட

இனி, உண்மைச் சரிதவியல் பிறழாதுரைக்கும் பெரிய புராணஞ் சிறுத்தொண்டநாயனார் வரலாற்றில், பரஞ் சோதியா ரென்னும் பெயருடைய அச் சிறுத்தொண்டர் ய திருச்செங்காட்டங்குடியிற் பிறந்தவரெனவும், அவர் போர்த்தொழில் பலவுங் கற்று மிகவல்லவராய்ச் சிவபெருமான் றிருவடிக்கண் மெய்யன்பு பூண்டொழுகித் தம்மரசனிடத்துத் தண்டத் தலைமை மேற்கொண்டு அவற்கு அணுக்கரா யிருந்தாரெனவும், அங்ஙனம் அமருங்காலத்து வடநாட்டில் வாதாவி என்னும் நகர்மேற் படையெடுத்துச் சென்று அதன் மன்னனை வெற்றிகண்டு வாகைசூடித் திரும்பத் தம் நாடடைந்து தம்மரசற்குப் பெரும்புகழெய்து வித்தா ரெனவுங் கிளந்துரையா நின்ற,

ஈசனடி யார்க்கென்று மியல்பான பணிசெய்தே

யாசில்புகழ் மன்னவன்பா லணுக்கரா யவற்காகப் பூசன்முனைக் களிறுகைத்துப் போய்வென்று பொருமரசர்

தேசங்கள் பலகொண்டு தேர்வேந்தன் பாற்சிறந்தார்

மன்னவற்குத் தண்டுபோய்

வடபுலத்து வாதாவித்

தொன்னகரந் துகளாகத்

துளைநெடுங்கை வரையுகைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/299&oldid=1590930" இலிருந்து மீள்விக்கப்பட்டது