உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 பன்மணியு நிதிக்குவையும்

பகட்டி னமும் பரித்தொகையு

மின்னனவெண் ணிலகவர்ந்திங்

கியலரசன் முன்கொணர்ந்தார்

.

291

என்னுஞ் செய்யுட்களானே அவர் மெய்வரலாறு இனிது விளங்குதலுடன், அவர் வடபுலத்து வாதாவி என்னும் நகர்மேற் படையெடுத்துச் சென்று அதனைத் தம்மரசற்கு உரிமையாக்கினா ரென்னுஞ் சரிதநுண் பொருளும் புலப்படுவதாயிற்று. இனி, வடநாட்டின்கட் டொகுக்கப்படுங் கல்வெட்டுப் பட்டையங் களானே முதல் நரசிம்மவருமன் என்னும் அரசன் மேலேயுரைத்த வாதாவிநகரை யழித்துத் தன்கீழ்ப்படுத்தினா னென்பதும், அப்போது அந் நகர் வேந்தனாயிருந்தோன் இரண்டாம் புலிகேசன் என்பதும் பெறப்படுகின்றன. இந்த நரசிம்மவரும அரசன் பல்லவவேந்தர் மரபில் வந்தோனாவன்.புலிகேசனென்னு மரசன் மேனாட்டுச் சாளுக்கியவேந்தர் மரபில் வந்தோனாவன். இனி, இப் பல்லவ வேந்தர்க்கும் மேனாட்டுச் சாளுக்கிய வேந்தர்க்கும் பலமுறையாலும் போர்கள் நிகழ்ந்தனவென்பதும் அப் பட்டையங்களானே பெறப்படும் உண்மையாம். மேலே மொழிந்த வாதாவிநகர் வெற்றி நரசிம்மவருமனை யொழித்து ஒழிந்த பல்லவ அரையர்மேற் செல்லாமையான், தம்மரசற்குத் தண்டத் தலைவராய்ப் படையெடுத்து மேற்சென்ற சிறுத்தொண்டரை அவ்வாறுடையனான வரசன் முதல் நரசிம்மவருமனே யாமென்ப தொருதலை. பெரியபுராணத்தில் இவ்வரசன் பெயர் சொல்லப்பட்ட தில்லையாயினும், வாதாவி நகரிற் காணப்படும் பல்லவ அரையன் கல்வெட்டுப் பட்டைய மொன்று அவ் வெற்றிக் குரியோன் அவ்வரசனென் றுரைக்கும் உறுதிமொழி பற்றிச் சிறுத்தொண்டர் தம் அரசன் முதல் நரசிம்மவருமனேயா மென்பது உய்த்துணர வல்லார்க்கு நன்குபுலனாம். இனி, மேலே காட்டிய இரண்டாம் புலிகேசனான மேனாட்டுச் சாளுக்கியவேந்தன் செங்கோலோச்சிய காலவளவை வடநாட்டுக் கல்வெட்டுகள் கொண்டு ஹூல்ஸ் என்னுங் கல்வெட்டு ஆசிரியராற் கி.பி. 609 முதல் 642 இறுதி யாமென நன்று குறித்திடப்பட்டது. இங்ஙனம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் றொடக்க முதல் அதனிடையளவுஞ்

ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/300&oldid=1590931" இலிருந்து மீள்விக்கப்பட்டது