உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

மறைமலையம் - 24

செங்கோலோச்சிய புலிகேசவரசனைப் புறங்கண்ட நரசிம்ம வருமன் முதலாலோனும் அந்நூற்றாண்டின் றொடக்க முதல் யளவும் இருந்தானா கற்பாலன். இனி அந்த நரசிம்ம வருமனென்னும் வேந்தற் குறுதுணைத் தண்டத்தலைவரான சிறுத்தொண்டரும் அந் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தாராகற்பாலர்.

இனி, ஞானசம்பந்தப் பிள்ளையார் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளிய காலையில் ஆண்டிருந்த சிறுத் தொண்டராற் றாம் பெரிதும் மெய்யன்போடு ஏற்கப்பட்டு அவரோடளவளாயினா ரென்பது,

அந்நாளிற் சண்பைநகர் ஆண்டகையார் எழுந்தருள முன்னாக எதிர்கொண்டு கொடுபுகுந்து முன்னூல்சேர் பொன்மார்பிற் சிறுத்தொண்டர் புகலிகா வலனார்தம் நன்னாமச் சேவடிகள் போற்றிசைத்து நலஞ்சிறந்தார் என்பதனானும்,

சண்பையர்தம் பெருமானுந் தாங்கரிய பெருங்காதற் பண்புடைய சிறுத்தொண்டர் உடன்பயின்று மற்றவரை மண்பரவுந் திருப்பதிகத் தினில்வைத்துச் சிறப்பித்து நண்பருளி எழுந்தருளத் தாம்இனிது நயப்புற்றார்

என்பதனானும் நன்குபெறப்படுகின்றது. இஃதல்லாமலும்,

6

ஞானசம்பந்தப்

பிள்ளையார்

நாயனாரைச் சிறப்பித்துச்,

செடிநுகருஞ் சமணர்களுஞ்

சீவரத்த சாக்கியரும்

படிநுகரா தயருழப்பார்க்

கருளாத பண்பினான்

பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க்

கருள்செய்யும் பொருட்டாகக்

கடிநகராய் வீற்றிருந்தான்

கணபதீச் சரத்தானே

எனவும்,

தாமே

சிறுத்தொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/301&oldid=1590932" இலிருந்து மீள்விக்கப்பட்டது