உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

3

293

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட வந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவுஞ்

சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர் தக்கோரே

எனவுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளிய வாற்றானும் அவர் நட்பின் கிழமைத்திறந் தெற்றென உணரப்படும். இதனானே, அச் சிறுத்தொண்டரோடு ஒருகாலத்தினரான ஞானசம்பந்தப் பிள்ளையார் காலமும் ஒன்றேயாதல் பெற்றாம். பெறவே, ஞானசம்பந்தப் பிள்ளையார் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியிலே இருந்தருளினாரென மலைவின்றி நிறுத்தப்பட்ட வாறு காண்க.

இன்னும், திரிசிரபுர மலைமுழைஞ்சிற் காணப்படுங் கல்வெட்டுக்களானே முதல்நரசிம்மவருமன் தந்தையான குணபரனென்னும் முதல்மகேந்திரவருமன் காலத்தில் திருநாவுக்கரைய ரென்னும் அப்பர் சுவாமிகள் இருந்தா ரன்பது ஹூல்ஸ் என்னுந் துரைமகனார் நிறுவிய வாற்றால் இனிது விளங்குதலின், அவ் வப்பர்சுவாமிகள் கி.பி.ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதியினும் ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியினும் இருந்தாரென்பது தேற்றமாம். இதனானே, அப்பர் சுவாமிகள் எண்பது ஆண்டளவு மிருந்தாரெனக் கூறும் தமிழ்நூல் வரலாற்றுண்மை பெரிதும் வலியுடைத்தாமாறு

காண்க.

இனி, எடுத்துக்கொண்ட மாணிக்கவாசகர் காலம் உறுதி செய்தற்பொருட்டு, மேலே காட்டிய அப்பர் ஞானசம்பந்தப் பெருமான் முதலியோர் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதிமுதல் ஏழாம் நூற்றாண்டின் முற்பாதி யீறாகவா மென்பதுபெறப்படுதலின், அது கொண்டு மாணிக்கவாசகர் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் முற்செல்லுமாறு காட்டுவாம். அப்பர் சுவாமிகள் அருளிச்செய்த “பாடிளம் பூதத்தினானும்” என்னுந் திருவாரூர்ப் பதிகத்தில்,

நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/302&oldid=1590933" இலிருந்து மீள்விக்கப்பட்டது