உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

மறைமலையம் 24

விரதங்கொண் டாட வல்லானும்

விச்சின்றி நாறு செய்வானும்

என்னுஞ் செய்யுளில் மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் நன்கெடுத்துக் குறித்திடப்பட்டது. தம்பொருட்டே பெருமான் நரிகளை யெல்லாங் குதிரைகளாகத் திரித்துக் கொண்டு போதருவானா யினானென மாணிக்கவாசக சுவாமிகள்,

நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்து

எனவும்,

நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா றன்றேயுன் பேரருளே

எனவுந்,

அரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்

எனவுந் தாமே தம் அருட்டிருவாயான் மொழிந் திடுதலின், றைவன் செய்தருளிய அத் திருவிளையாடல் மாணிக்கவாசகர் பொருட்டேயாமென்பது இனிது தேறப்படும். இப்பெற்றி தேறாத

ங்கிலமகனான இன்ஸ் என்பவர் சிலப்பதிகாரத்தானு ம் திருவிளையாடலானும் வன்னியுங் கிணறும் அழைத்த அற்புத நிகழ்ச்சி இரண்டாதல்போல நரியைக் குதிரையாக்கிய இவ்வற்புதமும் மாணிக்கவாகர் பொருட்டென்றும் அதற்கு முன்னே நிகழ்ந்த வேறொன்றுமாக இரண்டாகலாமெனவும், அங்ஙனம் அஃதிரண்டாகவே அப்பர் சுவாமிகளாற் குறித்திட்ட அவ்வற்புத நிகழ்ச்சியும் மாணிக்கவாசகர் மேலதாமாறு இல்லையெனவுந் தமக்குத் தோன்றியவாறே அளவைவரம்பு பிறழ்ந்துஎழுதுவாராயினார். வன்னியுங் கிணறும் அழைத்த திருவிளையாடல் இரண்டாதல்போல நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடலும் இரண்டாகல் வேண்டுமென்னும் யாப்புறவு யாங்ஙனம் பெற்றீரெனக் கடாவுவார்க்கு அத் துரைமகன் இறுக்குமா றின்றாம். வன்னியுங் கிணறும் அழைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/303&oldid=1590934" இலிருந்து மீள்விக்கப்பட்டது