உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

295

திருவிளையாடல் இரண்டாதற்கு மேற்கோள் சிலப்பதிகாரத் தினும் திருவிளை யாடலினுங் கண்டாம். அல்லதூஉம், சிலப்பதிகாரத்திற் பேசப்பட்ட ‘வன்னியுங் கிணறும் அழைத்த திருவிளை யாடலும் ' திருவிளையாடற் புராணத்திற் சால்லப்பட்ட ‘வன்னியுங் கிணறும் அழைத்த திருவிளை யாடலும்’ வேறு வேறு என்று நாட்டுதற்குத்தான் சான்றுகள் யாவை? இருவேறு நூல்களிற் கூறப்பட்டமையானே இரண்டென்றல் யாங்ஙனம்? அது கிடக்க. நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் இரண்டாதற்கு மேற்கோள் யாண்டுங் கண்டிலம். இங்ஙனம் அளவைநெறி பிழைத் தெழுதப்படும் போலிப் பொருள்களும் ஆங்கிலமொழியில் வரையப்படுதலிற் சிறந்தெடுத்துப் பாராட்டப்படுகின்றன. அரசியன்மொழி யல்லாத தமிழ் முதலிய சொற்களிலெழுதப் படும் அரிய பரிய உண்மைப் பொருள்களுஞ் சிறவாதொழிகின்றன. என்னை! என்னை! இம் மயக்கவுலகின் றன்மை யிருந்தவாறு! இதுகிடக்க.

நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மாணிக்க வாசகர் பொருட்டன்றிப் பிறிதாகவும் இயற்றப்பட்ட துண்டென்பதற்கு மேற்கோள் யாண்டுங் காணப்படாமை யானும், அத் திருவிளையாடல் தம்பொருட்டே நிகழ்த்தப் பட்டதென மாணிக்கவாசக சுவாமிகள் தாமே தம் அருமைத் திருவாயாற் கிளந்தெடுத்து மொழிந்தருளு தலானும் கல்லாடம் முதலான தொன்னூல்களும் அத்திருவிளையாடல் மாணிக்க வாசகர் பொருட்டே நிகழ்த்தப்பட்டதெனத் துணிவுதோன்றக் காட்டுதலானும் அத் திருவிளையாடல் பிறிதொன்றுளதெனக் கோடல் ஒருவாற்றானும் பொருந்து மாறில்லை. ஆகவே, மாணிக்கவாசகர் பொருட்டுச் செய்யப்பட்ட அத் திருவிளை யாடல் அப்பர் சுவாமிகளான் மொழிந்தருளப்பட்டமை யானே, மாணிக்கவாசகர் காலம் ஆறாம் நூற்றாண்டின் முன்னதாதல் இனிது துணியப்படுதல் காண்க.

இனித், திருமலைக்கொழுந்து பிள்ளையவர்கள், மாணிக்கவாசகர் காலம் கடைச்சங்கம் நிலைபெற்று விளங்கிய கி.பி. முதனூற்றாண்டின்கட் படுவதாமெனக் கூறிய உரைப்பொருளிற் கருத்தொருப்பாடு உறுகின்றிலம். என்னை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/304&oldid=1590935" இலிருந்து மீள்விக்கப்பட்டது