உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

  • மறைமலையம் - 24

கடைச்சங்கத்தார் காலத்துச் செய்யுளியல் வழக்கின்கட் படுவதன்றாய், அக்காலைத் தமிழில் ஒருசிறிதுங் காணப்படாத விருத்தப்பாட்டுகள் திருவாசகத்தின்கட் காணப்படுதலா னென்பது. கடைச் சங்கத்தார் செந்தமிழ்ச் செய்யுளியல் வழக்கின்கண்ணே விரவப்பெறாத விருத்தப்பாக்கள் உலகியலாறாய் மற்றுத் தமிழ்ப் புலனெறிவழக்கிற் புகப்பெறுதற்கு அச் சங்கத்தார் காலத்தின்பின் இரண்டு மூன்று நூற்றாண்டு கழிதல் வேண்டுமாகலான் மாணிக்கவாசகர் கடைச்சங்கத்தார் காலத்திருந்தாரெனக் கோடல் சரித வழுவாமென்றுணர்க. அற்றேல், விருத்தப்பாக்கள் பெருகிய செய்யுள் வழக்காய் நடைபெறுதற்குத் தொடங்கிய அப்பர் சுவாமிகளிருந்த ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே மாணிக்கவாசக ரிருந்தாரெனக் கொள்ளாமோ வெனிற்; காள்ளாம். திருவாசகத்தின்கண் விருத்தப்பாக்கள் மிக்கு விரவப் பெறாது ஒரு சிலவே காணக்கிடத்தலானும், தமிழ்ச் செய்யுளியல் வழக்கிற்கே சிறப்பானவாகிய அகவலுங் கலியும் பெரிதும் விரவிக்கிடத்தலானும் தமிழ்ச்செய்யுட்கள் முறை முறையே வழக்குவீழ்ந்து விருத்தப்பாக்கள் இடையிடையே விரவப் பெறுகின்ற காலத்தே திருவாசகம் அருளிச்செய்த மாணிக்கவாசக ரிருந்தாரெனல் ஒருதலையாம். அக்காலந் தான் யாதென்று நுணுகி நோக்குவார்க்கு அது கி.பி. மூன்றாம் நூற்றாண்டாமென்பதினிது விளங்கும். அல்லதூஉம், நக்கீரர் முதலான தெய்வப்புலவர் விளங்கிய காலத்தில் மாணிக்கவாசகர் ருந்தாராயின் தாம்அவரைக்குறித்து ஏதும் மொழிந்திடுவர்; அங்ஙனம் ஒன்றுஞ் சொல்லாமையானும், மதுரையில் ஆய்ந்த தமிழைப்பற்றிப் பேசவந்தவிடத்தும் “உயர் மதிற்கூடலி னாய்ந்த வொண்டீந்தமிழின்றுறை” என்று இறந்தகாலத்தா னுரைத்துக் கடைச்சங்க காலந் தமக்கு முன்னதாதல் குறிப்பான் உணரவைத்தலானும் அவர் காலமும் வேறே கடைச்சங்க காலமும் வேறே யென்பது உணரற்பாற்று. கடைச்சங்க காலத் னாயு மொண்டீந்

66

திருந்தாராயின் உயர் மதிற்கூடலி

தமிழின்றுறை” என்று கூறிடுவார்; அங்ஙனங் கூறுதலாற் செய்யுள் சிதையுமாறுமின்று. இதுகிடக்க.

னிக், கல்லாடம் சங்கச்செய்யுளாகலின் அதன்கட் குறிப்பிடப்பட்ட ‘பிட்டுக்கு மண்சுமத்தன்' முதலிய வற்றானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/305&oldid=1590936" இலிருந்து மீள்விக்கப்பட்டது