உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

297

அவ்வற்புதங்கள் நிகழ்தற்கு ஏதுவாயிருந்த மாணிக்கவாசகர் காலம் சடைச்சங்ககாலமெனத் துணியப்படுமாம் பிறவெனின்: நன்று கடாயினாய், கல்லாடம் சங்கச் செய்யுளேயாமென்று துணிதற்கு மேற்கோள் யாண்டுங் காணப்படாமையானும், அல்லது அது சங்கச் செய்யுளென்றே கோடுமாயின் அது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு முதலியவற்றின்கட் சேராமை யென்னையெனுங் நிகழ்தலானும், சங்கச் செய்யுண் மேற்கோள்கொண்டு உரை யெழுதுவாரான இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க் கினியர் முதலான உரையாசிரியன்மாரும் அதன்கண் மேற்கோள் கொண்டு தம்முரையிற் குறித்திடாமை யானும், சங்கத்தார் காலத்து அகவற்செய்யுள் அமைப்பிற்குங் கல்லாட வகவற்செய்யுள் அமைப்பிற்கும் வேறுபாடு பெரிது

காணக்கிடத்தலானும்

பிறவாற்றானுங் கல்லாட

கடா

நூல்

லக்

சங்கத்தார் காலத்ததாதல் செல்லாதென்பதூஉம், அக் கல்லாட நூலையே பெரியதொரு நிலைக்களனாகக்கொண்டு மாணிக்கவாசகர் காலம் உறுதிசெய்யப் புகுந்த திருமலை கொழுந்து பிள்ளையவர்கள் உரை வாய்ப்புடைத்தாமா றில்லையென்பதூஉம் நுணுகி யாராயவல்லார்க்கெல்லாம் நன்றுணரக்கிடக்கும். இன்னும் அவர்கள் தாமெழுதிய அவ்வுரை நூலின்கண் மேலே காட்டிய உரையாசிரியன்மார் யாருந் தம்முரையில் தேவாரத் திருப்பாட்டுகளை மேற்கோளாக மொழிந்தில்லையெனவும், சரிதமுறை பிறழாத பெரியபுராணமும் ஒரோவிடங்களில் அம்முறை வழுவுகின்ற தெனவும் பிறவுங் கூறாநிற்பர். நச்சினார்க் கினியர்க்கு முன்னிருந்தோரான பேராசிரியர் திருச்சிற்றம்பலக் கோவையாருரையில் அப்பர் சுவாமிக ளருளிச்செய்த,

.

.

அண்ட மாரிரு ளூடு கடந்தும்ப

ருண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர் கண்டிங் காரறி வாரறி வாரெல்லாம்

வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே

என்னுந் திருப்பாட்டை எடுத்துக் காட்டுதலானே உரையாசிரியர் யாருந் தேவாரத்திருப்பாட்டை மேற்கோளாக எடுத்து மொழிந்திலரென்னும் உரை பொருத்தமின்றாமாறுணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/306&oldid=1590937" இலிருந்து மீள்விக்கப்பட்டது