உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

299

காண்டலானும், இறைவனே இயற்றிய திருவிளையாடல்களி னிடையே திருஞானசம்பந்தப் பெருமா னியற்றிய அற்புதங் களையுங் கோத்தற்கு ஓரியைபு இன்மையானும் கல்லாடத்துட் குறிப்பிடப்பட்ட பழைய திருவிளையாடல்கள் அறுபத்து நான்கனுள் திருஞானசம்பந்தப் பெருமான் அவற்றிற்குப் பிற்காலத்தே நிகழ்த்திய அற்புதங்கள் சேர்ந்திலவென்பது தேற்றமாமென்க.

வ்வாற்றால், கல்லாட நூல்அப்பர் ஞானசம்பந்தர் முதலான மூவர் காலத்திற்கு முன்னும், மாணிக்கவாசகர் காரைக்காலம்மையார் காலத்திற்குப் பின்னும் எழுதப் பட்டதொன்றாதல் நன்கு பெறப்படுதலின் கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டின் கண்ணதான அக்கல்லாட நூலையே கருவியாகக் கொண்டு மாணிக்கவாசகர் கடைச்சங்கம் நிலைபெற்று விளங்கியஞான் றிருந்தாரெனக் கூறுதல் ஒரு சிறிதும் ஏலா வுரையாமென்பதும், அந்நூல் கொண்டு அவர் ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தா ரெனல் மட்டும் இனிது விளங்குமா மென்பதும் பெறப்படும். இது கிடக்க.

இனி, ஆங்கில மகனான இன்ஸ் என்பவர் ஞான சம்பந்தர் முதலான குரவன்மார் மூவருள் யாரும் மாணிக்கவாசகரைத் தம்பதிகத்துட் கிளந்தெடுத்துக் குறித்திடாமை யான் அவர் அம் மூவர்க்கும் பின்னிருந்தா ரென்பது உய்த்துணரற்பாற்றென மொழிந்ததூஉம் பொருந்தாது. யாம் மேலே காட்டிய “நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்” என்பதும், “மணியார் வைகைத் திருக்கோட்டின் நின்றதோர் திறமுந் தோன்றும்" என்பதும் அப்பர் சுவாமிகள் திருப்பாட்டுகளாக லானும், மாணிக்கவாசகர் பொருட்டியற்றப்பட்ட திருவிளை யாடல்கள் அவற்றிற் காணப்படுதலானும் மாணிக்கவாசகர் அக்குரவன்மார் எவரானும் மொழியப்படவில்லை என்பது யாண்டையதென் றொழிக. அற்றன்று, முன்னைக்காலத்துச் சிவனடியார் தம்மையெல்லாந் தொகுத்தோதி வழுத்துவான் புகுந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாணிக்கவாசகரையும் அங்ஙனம் எடுத்துமொழிந்த தில்லையாலோ வெனின்; நன்றே வினாயினாய், ‘அதெந்துவே' 'வேசறு' என்னும் வடுகுமொழிச் சொற்களும், வடுகர் நாட்டிலுள்ள 'மகேந்திர' வெற்பைப்பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/308&oldid=1590942" இலிருந்து மீள்விக்கப்பட்டது