உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

மறைமலையம் - 24

ச்

குறிப்பும் திருவாசகத்தின்கட் காணப்படு தலானும், வீரசைவர் தமது திருமேனிக்கட் சிவலிங்கம் பூணுங்குறிப்பு ‘என் னுடலிங்கொண்டாய்” என்னுஞ் சொற்றொடராற் பெறப்படுதலானும் மாணிக்கவாசகர் வடுகநாட்டு வீரசைவ குலத்துப் பிறந்த பெரியாரென்பது பெறப்படுகின்றது. வீரசைவநெறி பிழையாது நின்று சிவ வழிபாடியற்றிச் சிவபிரான் திருவடிப் பெரும்பேறு தலைக்கூடிய அவரைச் சித்தாந்த சைவ மரபின்கட் டோன்றிச் சித்தாந்த சைவத் துறைவழிநின்று இறைப்பணி பேணிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், சித்தாந்த சைவத்துறை வழி நின்று அங்ஙனமே இறைவன் றிருவருணெறி தலைக்கூடிய ஏனைச் சித்தாந்த சைவப் பெரியாரைத் தொகுத்தோதுந் தந் திருப்பதிகத்தினுட் கிளந்தெடுத்துக் கூறுதற்கு அமர்ந்திலராய்ப், “பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்” என்பதனாற் குறிப்பாற் கொள வைத்துக் கூறியருளினார். 'பொய்யடிமையில்லாத புலவர்' என்பது தொகையடியாரைக் குறிப்பதென நம்பி யாண்டார் நம்பி கூறினாரேனும், அச் சொற்றொடர் தனியடியாரைக் கூறுந் திருப்பாட்டின்கட் காணப்படுதலானும், தொகையடி யாரையே ஒருங்கு தொகுத்தோதும் “பத்தராய்ப் பணிவார்கள்” என்னும் பாட்டு வேறு தனியே யுண்மையானும், சேக்கிழாரும் 'பொய்யடிமை யில்லாத புலவரைத்' தொகை யடியாரெனக் கிளந்து கூறாமையானும் அச் சொற்றொடர் மாணிக்க வாசகரையே குறிக்குமென்றல் இழுக்காது. மாணிக்கவாசக சுவாமிகள் வீரசைவ மரபிற்குரிய ரேயா மென்பது வீரசைவ மரபினருந் துறவோரும் மாணிக்க வாசகரைத் தம் முதல் ஆசிரியராய்க் கொண்டு அவர்அருளிச் செய்த திருவாசகத்தைத் தமக்குரிய முதன்முறையாய் வைத்துப் பண்டுதொட்டு வழிபாடு ஆற்றி வருதலானும், புதுச்சேரி முதலான இடங்களிலுள்ள வீரசைவ மடாதீனங்களெல்லாம் மாணிக்கவாசகர் பெயர் கொண்டே நிலவுதலானும் இனிது துணியப்படும். இப்பெற்றி தேறாத சைவசித்தாந்த நன்மக்களில் ஒரு சிலர் நடுநிலை திறம்பி மாணிக்கவாசக சுவாமிகளைத் தமிழ் நாட்டுச் சைவசித்தாந்த மரபின்கட் டோன்றியவரேயா மெனக் கொண்டு, ஏனைச் சைவசித்தாந்த குரவன்மார் அவரைத் தந் திருப்பதிகங்களுட் கிளந்து குறிப்பிடாமை

T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/309&oldid=1590944" இலிருந்து மீள்விக்கப்பட்டது