உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

301

யென்னையென்று எதிர் கடவுவார்க்குச் செவ்வனே இறுக்க லாகாமையின் ஏதேதோ தமக்குத் தோன்றியவாறெல்லாங் கூறிப்பெரிதும் இடர்ப்படுவாராயினர். சமயங் கடந்த நிலையாய் விளங்கும் மெய்கண்ட சித்தாந்த மரபுபேணும் நல்வினை பெரிதுடையோ மாயினும், நடுநிலை பிறழாது உண்மைப் பொருளை யுலகிற்குள்ளவாறு தெளித்தல் வேண்டுமென்னும் மாணிக்கவாசக சுவாமிகள்

மனவுறுதிப்பாடுகொண்டு

சரிதத்தை உண்மையாராய்ச்சி செய்து, அவ் வாராய்ச்சியில் யாம் மெய்யெனத் துணிந்துகண்ட பொருட் கூறுபாடு பற்றி அச் சுவாமிகள் வீரசைவ மரபினரேயாமென உலகிற்கு அறிவிக்குந் துணிபுடைய மானோம். இதனைக் காணும் சைவசித்தாந்தச் செல்வர்கள் இதுபற்றி நம்மேற் கதுமென வெகுளாது, அதனைப் பொறுமையுடன் ஆய்ந்து பார்த்துத் தம் உண்மைக் கருத்தை யுலகின்கண் வெளிப்படுப்பார்களாக!

எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்னுந் திருக்குறள் உண்மை கடைப்பிடிக்க வல்லார்க்கே யாங்கூறிய உரை வாய்மை நன்கு புலப்படா நிற்கும். இனி, மாணிக்கவாசக சுவாமிகள் அங்ஙனம் வீரசைவ மரபின்கட் பிறந்தாராயினுஞ் சைவசித்தாந்த முடிபொரு ளுணர்ந்து அப் பொருணெறி வழாதொழுகிச் சிவவழிபாடியற்றிச் சிவமுத்தி தலைக்கூடினாரென்பது அவர் அருளிச்செய்த திருவாசகத் திருமுறையானே நன்கு பெறப்படுதலின், அவர் வீரசைவ மரபின்கட் பிறந்தா ரென்பது பற்றி ஈண்டைக் காவதோ ரிழுக்கில்லையென விடுக்க. அற்றேற், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவர்தம் மரபின்வழி கருதாமல் அவரைத் தந் திருப்பதிகத்திற் கிளந்தோதவமையுமாம் பிறவெனின்; அற்றன்று, சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தே மல்கிக்கிடந்த வீரசைவ மரபினர் மாணிக்கவாசகரைத் தமக்குரிய குரவராகக் கொண்டு பேணி வழிபட்டு வந்தார்களாதலின் அவர் அ தம்மைத் தந் திருப்பதிகத்தினுட் கிளந்தோத ஒருப்பட்டிலா. வீரசைவத்தைப் பற்றிய குறிப்பு காமிகம், சுவாயம்புவம், சுப்பிரபேதம், வீரம் முதலான சிவாகமங்களிற் காணப் படலானும், வீரசைவர் கொள்கையாகிய சிவாத்து விதத்தை இனிது விளக்கலாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/310&oldid=1590947" இலிருந்து மீள்விக்கப்பட்டது