உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

6

மறைமலையம் 24

சங்கரபாடியத்திற்கும் முற்பட்ட நீலகண்டபாடியம் சிவாத்துவித பாடியமென வழங்கப் படலானும், எல்லா வழிபாட்டினும் முற்பட்ட சிவலிங்க வழிபாட்டைக் கடைப்பிடியாய்ச் செய்து வருதலோடு சிவலிங்க வடிவினைத் தம துடம்பின் மிசையும் அணிந் திருத்தல்பற்றி வீரசைவர் 'இலிங்கிகள்' எனப் பண்டு தொட்டே பெயர் பெறலாயினா ரென்பது சங்கம் மருவிய பழைய நூலாகிய திரிகடுகத்தில் “சொல்வென்றி வேண்டும் இலிங்கியும்” எனப்போந்த குறிப்பால் நன்குவிளங்கலானும், தொன்றுதொட்டு இன்றுகாறுந் தெலுங்கு, கன்னடம் முதலான நாடுகளிலுள்ளார் பலரும் வீரசைவராகவே யிருப்பக் காண்டலானும் வீரசைவம் மிகப் பழைய காலத்ததென்பது திண்ணமாமென்க. முற்காலத்தில் வீரசைவ மரபினர் பெருக்கமுற்றிருந்தாரென்பதற்குப் பிரபுலிங்கலீலை, இலிங்கபுராணம், வசவபுராணம் முதலான நூல்களும் சான்றாம். அற்றேல், நம்பியாண்டார் நம்பிகள் தாந் திருமுறை வகுப்புச் செய்தருளிய காலத்தில் திருவாசகத்தை ஏனைக் குரவன்மார் அருளிச்செய்த திருமுறைகளோடு ஒருங்கு வைத்து எட்டாந் திருமுறையாக வகுத்தவா றென்னையெனின், நம்பியாண்டார் நம்பிகள் காலத்தே வீரசைவ மரபு சுருங்கி வருதலானும், திருவாசகத்தின்கட் காணப்படுஞ் சொன்னயம் பொருணயங்களுஞ் சித்தாந்த சைவக் கோட்பாடுகளும் எல்லாரானும் பெரிதும் போற்றப்பட்டு வருதலின் அதன்கட் காணப்படும் வீரசைவப் பொருணுட்பங்கள் உணர்வாரின்மை யால் மறைந்து போதலானும், சித்தாந்த சைவரெல்லாரும் அத் திருவாசகந் தமக்குமுரியதென்று போற்றுதலானும் அதனை அவ்வாறு எட்டாந் திருமுறையாகக் கோத்தாரென உரைக்க. ங்ஙனமாகலின், ஏனைக் குரவன்மார் தந் திருப்பதிகங்களுள் அவரைக் கிளர்ந்தெடுத்து மொழிந்திடாமை கொண்டே அவர் அக்குரவன்மார் மூவர்க்கும் பின்னிருந்தாரெனக் கூறுதல் போலியா யொழியு மென்பது.இதுகிடக்க.

இனி, யாம் மேலே விளக்கிய உரையின்கட் சிலர் கருத்தொருப்பாடிலராய் “யாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்பாரோடொத்து, ஏனைக் குரவன்மார் மூவரும் மாணிக்கவாசகரைத் தந் திருப்பதிகங்களுட் கிளந்தெடுத்துக் கூறாமையான் அவர் அம் மூவர்க்கும் பின்னிருந்தமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/311&oldid=1590949" இலிருந்து மீள்விக்கப்பட்டது