உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் - 24

இனி, னி, அச் 'சேரன் செங்குட்டுவன்' நூலார் ஆசிரியர் நக்கீரனார் இருந்த காலத்தை ஆராயப்புகுந்து, பழையன் மாறன் கிள்ளிவளவனை வென்ற செய்தி ‘அகநானூறு' 346 ஆஞ் செய்யுளில் நக்கீரனாராற் கூறப்படுதல் கொண்டும், அப் பழையன் மாறன்சேரன் செங்குட்டுவனொடு பொருந்தா னென்பது ‘பதிற்றுப்பத்தில்' நுவலப்படுதல் கொண்டும் நக்கீரனார் சேரன்செங்குட்டுவன் காலத்தவராதல் வேண்டு மெனத் துணிந்துரைக்கின்றார்.

இனி,

.

னி, இவரது துணிவுரையின் பிழைபாடு இனைத் தென்பது ஆராய்ந்து காட்டுவாம்: மோகூர் மன்னன் என்னும் பெயரைக் கண்ட அளவானே அவன் ‘பழையன் மாறனே' யாதல் வேண்டும் எனவும், 'பழையனே மாறன்' என்னும் பெயரைக் கண்ட அளவானே அவன் ‘சேரன் செங்குட்டுவ னோடு' பொருத 'பழையனே'யாதல் வேண்டு மெனவும் ஆராயா முடிபுகட்டுதலில் மிக வல்லுநரான 'சேரன் செங்குட்டுவன்’ நூலார் ஈண்டும் அங்ஙனமே ஆராயாது முடிபு கட்டுந் தமது வன்மையைக் காட்டுகின்றார். 'பழையன்’ எனப் பெயர்பூண்ட சிற்றரசர் இருவர் மோகூரில் இருந்தன ரன்பதும், அவ் விருவரில் ஒருவன் ‘தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன்' காலத்திலும் மற்றொருவன் அப்பழையற்குப் பேரனாய் அவற்கு ஒரு நூற்றாண்டு பிற்பட்டுச் சேரன் செங்குட்டுவன் காலத்திலும் இருந்தனரென்பதை மேலே 599, 600 ஆம் பக்கங்களில் நன்கு விளக்கிக் காட்டினாம். மோகூரிற் ‘பழையன்' என்னும் பெயர்பூண்டிருந்த இவ்விரு சிற்றரசரேயன்றிப், 'போஓர்' என்னும் மற்றோர் ஊரிற் பழையன் எனப்பெயர் பூண்டிருந்தசிற்றரசன் வேறொருவனும் உளன் என்பது அகநானூற்றிற் ‘பரணர் பாடிய 189, 326 ஆஞ் செய்யுட் களானும் நன்கறியப்படும். எனவே, தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலந் தொட்டுச் சேரன் செங்குட்டுவன் காலம் வரையில், மோகூரிற் பழையன் எனப் பெயர்பூண்ட சிற்றரர் இருவரும் போஓர் என்னும் ஊரில் அப் பெயர் பூண்ட சிற்றரசன் வேறொருவனும் ஆகப் ‘பழையர் மூவர் இருந்தமை பெறப்படுதல் காண்க.

ங்ஙனமே, ‘கிள்ளிவளவன்' எனப் பெயர்வாய்ந்த சோழ மன்னரும் அவ்வொரு நூற்றாண்டில் மூவர் இருந்தமை பழைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/31&oldid=1590505" இலிருந்து மீள்விக்கப்பட்டது