உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

23

தமிழ்நூல்களால் நன்கு புலனாகின்றது. 'புறநானூற்'றின் 373 ஆஞ் செய்யுளாற் 'குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான் ஒருவனும், 34, 35 முதலான பல செய்யுட்களாற் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஒருவனும், சிலப்பதிகாரத்தானும் (நீர்ப்படைக் காதை, 118), மணிமேகலை யானும் (25, 14) அந் நூலாசிரியர் காலத் திருந்தவனாகப் பெறப்படுங் 'கிள்ளிவளவன்' மற்றொருவனுமாக மூவர் பெறப்படு கின்றனர். கோவூர் கிழார், ஆவூர்மூலங்கிழார், இடைக் காடனார், மாறோக்கத்து நப்பசலையார் முதலான நல்லிசைப்புலவர் பலருங், கபிலர் என்னுஞ் சான்றோர் காலத்தவரென்பது நன்கறியக்கிடத்தலின், இப் புலவர் பெருமக்களாற் பாடப்பெற்ற முதலிரு கிள்ளிவளவருங் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தோராதலும், மூன்றாங் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின்

கிள்ளிவளவன்,

டைக்காலத்திருந்தோனாதலும் இனிதுவிளங்காநிற்கும். மற்று ஆசிரியர் நக்கீரனாரோ ஆவூர்மூலங்கிழார், இடைக் காடனார் முதலான சான்றோர் காலத்தவர் என்பதை மேலே 579, 580 ஆம் பக்கங்களில் விளக்கிப் போந்தாம். ஆகவே நக்கீரனாராற் குறிப்பிடப்பட்ட பழையன் மாறனும், அவனாற் றோல்விபெற்ற கிள்ளிவளவனுங் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்த வேறுமன்னராதல் வேண்டுமே யன்றிச், சேரன் செங்குட்டு வனாற் றொலைவுண்ட பழையனும், அச் செங்குட்டுவற்கு மைத்துனனான கிள்ளிவளவனும் ஆகாரென்பதூஉந் தானே பெறப்படும்.

ஈ ஈதிங்ஙனமாகவுஞ், ‘சேரன்செங்குட்டுவன்' நூலார் 'கிள்ளிவளவன்' என்னும் பெயரைக் கண்டதுணையானே அவ் வளவன் செங்குட்டுவன் மைத்துனனேயாதல் வேண்டுமென ஆராயாது முடிவு கட்டியது நிரம்பவும் பிழைபாடான தொன்றாம். மேலும் அவர், இவ் வளவன், கரிகாலனுக்கு மகனாதல் வேண்டுமெனவும் ஏதொரு சான்றுங் காட்டாது கூறினார் (சேரன்செங்குட்டுவன், பக்கம் 102) 102) கரிகாற்

வ்

ருவளத்தானுக்கும் சேரன்செங்குட்டு வனுக்கும் இடையே இரண்டு தலைமுறை யாதல் சென்றதாகல் வேண்டுமென்பதை மேலே 491, 492 ஆம் பக்கங்களில் விளக்கிக்காட்டினாம். அதனால், மூன்றாங் கிள்ளிவளவன் கரிகாற் சோழனுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/32&oldid=1590510" இலிருந்து மீள்விக்கப்பட்டது