உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் - 24

பேரனாகவாதல் பேரன் மகனாகவாதல் இருத்தல் வேண்டுமே யல்லாமல், அவனுக்கு L மகனாதல் ஒருவாற்றானுஞ் செல்லாதென உணர்ந்துகொள்க. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உறையூரைத் தலைநகராய்க் கொண்டு அரசுபுரிந்தோ னென்பது 39 ஆம் புறப்பாட்டால் அறியப்படு தலின், அவன் காலத்திற் புகார் நகரில் (காவிரிப்பூம்பட்டினத்தில்) அரசு செலுத்தின கரிகாற் சோழன் அவனுக்குத் தந்தையோ உடன்பிறந்தானோ ஆதல் வேண்டும். மற்றுக் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனும் அக் காலத்தவனே யாதலின் அவன் கரிகாற் பெருவளத்தானுக்குப் பின் புகார் நகரில் அரசு புரிந்தோனா கற்பாலன். இவ்விரண்டாங் கிள்ளிவளவனுக்குப் பின் சோழன் கோச் செங்கணானும் அவனுக்குப்பின் மூன்றாங் கிள்ளிவளவனும் புகார் நகரிற் செங்கோல் செலுத்தினார் ஆகற்பாலார் 'களவழி' பாடிய பொய்கையார், கபிலர் காலத்தையடுத்தும் நக்கீரனார் காலத்தும் இருந்தவரென்பது 580 ஆம் பக்கத்திற் காட்டினே மாதலின், பொய்கையாராற் பாடப்பெற்ற கோச்செங்கணான், கரிகாற் பெருவளத் தானுக்குப் பின் அரசாண்டவன் எனக் கோடலே பொருத்தமாம் என்க. எனவே, செங்குட்டுவன் மைத்துனனான கிள்ளிவளவன், சோழன் கோச்செங்கணானுக்குப் பின் காவிரிப் பூம்பட்டினத்தில் அரசு செலுத்தினமை ெ தளிபொருளாகலின் இவன் கரிகாலனுக்குப் பேரன் முறைய னாகற்பாலனேயன்றி, மகன் முறையனாதல் ஒருவாற்றானுஞ் செல்லாதென விடுக்க.

இனிக், கூடல் நகரில் பழையன் மாறனாற் சாய்ப்புண்ட கிள்ளிவளவன் ‘களவழி' பாடிய பொய்கையார் காலத்தவன் என்பது, அங்ஙனம் அவன் சாய்ப்புண்டதனைக் கண்டு உளம் மகிழ்ந்த கோக்கோதைமார்பன்” என்னுஞ் சேரமன்னனை அப் பொய்கையார் பாடியிருத்தலே (புறநானூறு, 48, 49) சான்றாம். இக் கோக்கோதை மார்பனை நக்கீரனாருந்தமது செய்யுளிற் குறிப்பிட்டிருத்தலை மேலே காட்டினாம். ஆகவே, பழையன் மாறனாற் றோல்வியுற்ற கிள்ளிவளவன் கி.பி.முதல் நூற்றாண்டின் நடுவிலிருந்த நக்கீரனார் காலத்தவனேயன்றிக், ர ண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த இளங்கோவடிகளின் காலத்தவனான மூன்றாங் கிள்ளிவளவன் அல்லனென ஓர்ந்து கொள்க. மேலும், இம் மூன்றாங்

கி.பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/33&oldid=1590514" இலிருந்து மீள்விக்கப்பட்டது