உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

பை

25

கிள்ளிவளவனொடு பகைத்து இவற்குத் தீதுசெய்தோர் சோழர் குடியிற் பிறந்த ஒன்பது குறுநில மன்னரே யல்லாமற், பழையன் மாறன் அல்லன்; இது,

நின், மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநா டழிக்கும் மாண்பின ராதலின் ஒன்பதுகுடையும் ஒருபக லொழித்தவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்

என்று சிலப்பதிகாரமும்,

ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோன் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து

(27.118 123)

(5,பதிகம்)

என்று பதிற்றுப்பத்தும் நுவலுமாற்றான் அறிந்து கொள்ளப்படும். எனவே, பழையன் மாறனொடு பகைத்து வீழ்ந்தவன், மூன்றாங் கிள்ளிவளவனுக்குப் பாட்டனாகக் கருதப்படுதற்குரிய நக்கீரனார் காலத்துக் கிள்ளிவளவனே யென்பது தெளிபொருளாம் என்க.

-

அற்றேல், மூன்றாங் கிள்ளிவளவனுக்கு மைத்துனனான சேரன்செங்குட்டுவன், மோகூர் மன்னன் பழையனைத் தாக்கினானென்னும் வரலாறும் உளதாலோவெனின்; தனக்குப் பகைவனாதல்பற்றி அவனை அவன் தாக்கினனென்பது சிலப்பதிகாரத்தானும் (27, 124 - 125), பதிற்றுப்பத்தானும் (5,44, 49, பதிகம்) பெறப்படுகின்றதே யல்லாமல், கிள்ளிவளவனுக்குப் பகையாதல் பற்றித் தாக்கின னென்பது பெறப்படாமையால், அதுகொண்டு ஈண்டைக் காவதோர் இழுக்கில்லையென உணர்ந்து கொள்க. அதுவேயுமன்றிப் பெயர்க்கும், ‘பழையன் மாறன்' என்னும் பெயர்க்கும் 'பழையன்' என்னும் பெயர்க்கும் உள்ள வேற்றுமையுங் கருதற் பாற்று. சேரன்செங்குட்டுவனால் தாக்குண்டோன் மேற்காட்டிய இரு நூல்களினும் ‘பழையன்' எனப்பெயர் சொல்லப் பட்டானே யன்றிப் 'பழையன்’ பழையன் மாறன் எனப் பெயர் சொல்லப்பட்டிலன். அகநானூற்றின் நக்கீரனார் செய்யுளிற் சொல்லப் பட்டவனோ, “இழையணி யானைப் பழையன் மாறன்” எனப் பெயர் சொல்லப்பட்டவனா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/34&oldid=1590519" இலிருந்து மீள்விக்கப்பட்டது