உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

தலைவனாய்க்

  • மறைமலையம் - 24

யிருக்கின்றான்; மேலும், அப் பழையன்மாறன் மோகூர் மன்னன் என்பது அவரால் சொல்லப்படாமல் அவன் கூடன்மா நகரிலிருந்து கொண்டு ஆண்டு வந்தெதிர்த்த கிள்ளிவளவனைச் சாய்த்தனனென்றுந் துணையே சொல்லப்பட்டமையால் அப் பழையன் மாறன் பாண்டிய மன்னன் படைத் தலைவனேயாதல் உய்த்துணர்ந்து கொள்ளப்படும் நக்கீரனார் காலத்துப் பாண்டியனும் (இவன் லவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனாய்' இருக்கலாம்) சேரமான் கோக்கோதைமார்பனுங் கூடலில் ஒருங்கு படைகூட்டிப் 'பழையன் மாறனைப் படைத் கொண்டு நிற்க அவரை அஞ்ஞான்று வந்தெதிர்த்த 'கிள்ளிவளவன்' என்னுஞ் சோழனையே பழையன்மாறன் சாய்த்தானாகல் வேண்டும் என்று ஓர்ந்து காள்க. இங்ஙனம் இவரை வந்தெதிர்த்த கிள்ளிவளவன், கரிகாற் சோழனுக்குப்பின் உறையூரிலாதல் புகாரிலாதல் அப்பெயர் பூண்டு அரசாண்ட இருவரில் ஒருவராதல் வேண்டுமென்பதூஉம் உய்த்துணரப் படும். படவே, பழையன் மாறனாற் சாய்ந்த கிள்ளிவளவன் பாட்டானும், சேரன் செங்குட்டுவன் மைத்துனனான கிள்ளிவளவன் பேரனும் ஆவராகலின், வேறுவேறான அவ் விருவரையும் ஒன்றுபடுத்திய 'சேரன் செங்குட்டுவன்' நூலாரது கோள்பெரியதொரு வழுக்கோளாமென விடுக்க. நக்கீரனாராற் சொல்லப்பட்ட பழையன் மாறனும், அவனாற் சாய்ப்புண்ட கிள்ளிவளவனும் சேரன்செங்குட்டுவன் காலத்தினர் ர் அல்ல ரென்பது

தெளியப்படவே, ஆசிரியர் நக்கீரனாரும் அச் சேரன் காலத்தவர் அல்லரென்பதூஉம், அவர் அவனுக்கு இரண்டு தலைமுறை முற்பட்டவராவ ரென்பதூஉந் தெளியப்படும்; படவே நக்கிரனாருஞ் செங்குட்டுவனும் ஒரு காலத்தவரென்ற சேரன் செங்குட்டுவன் நூலாருரை பொருந்தாவுரையானமை கண்டுகொள்க.

னிச், 'சேரன்செங்குட்டுவன்’ நூலார், இறையனாரகப் பாருளுக்கு ஆசிரியர் நக்கீரனார் உரைத்த உரை யாரய்ச்சியில் இறங்கி, அவ்வுரை வாய்ப்பாடமாகப் பத்துத் தலைமுறை வரையில் ஓதப்பட்டுவந்து, இடையிடையே பல திரிவுபாடுகள் உடைத்தாய்க், கடை முறையாகக் கி.பி. எட்டாம் நூற்றாண் டிலேயே எழுத்துருவடைந்ததென்றும், தலைமுறையொன்றுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/35&oldid=1590524" இலிருந்து மீள்விக்கப்பட்டது