உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

27

முப்பதாண்டாகப் பத்துத் தலைமுறைக்கும் முந்நூறாண்டு கூட்ட நக்கீரனார் இருந்தது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு கி.பி.ஐந்தாம் மேற்படாதென்றுங் கூறினார். இவர் இவ்வாறு கூறாநிற்கத், 'தமிழ்வரலாறு” உடையாரோ இறையனாரகப் பொருளுரை ஊர் பெயர் தெரியாத ஒருவரால் எழுதப்பட்டதேயன்றி நக்கீரனாரால் எழுதப் பட்டதன்று (தமிழ்வரலாறு, பிற்பாகம், பக்கம், 21) என உரைப்பர். இவர் வழிச் சார்ந்தார் சிலரும் இங்ஙனமே உரையாநிற்பர்.

இற்றைக்கு இருபத்து நான்கு ஆண்டுகட்குமுன்னரே யாம் 'சேரன் செங்குட்டுவன்' நூலாரொடு வழக்கிட்டு, 'இறை யனாரகப் பொரு'ளுக்கு நக்கீரனார் வரைந்த உரையே இஞ்ஞான்றும் நடைபெறுகின்ற தெனவும், அவ் வுரையின் பாயிரப்பகுதியிற் சில உரைக் கூறுகளும், உரையின் இடை ட யிடையே கட்டளைக் கலித்துறைப் பாட்டுக்களும் பின் வந்தோராற் சேர்க்கப்பட்டிருத்தல் கொண்டு, அவ்வுரை முழுதும் நக்கீரனார் உரைத்தபடியாகவன்றிப் பெரிதுந் திரிபெய்தி வந்துளதென்றலும், அது வாய்ப்பாடமாக ஓதப்பட்டு வந்து பிற்காலத்தே தான் எழுத்துருவடைந்த தென்றலும் பொருந்தா எனவும் 1902 ஆம் ஆண்டு வெளிப்போந்த ஞானசாகர முதற்பதுமத்தின் 9, 10 ஆம் இதழ்களில் விரித்து விளக்கினேம். இறையனாரகப் பொருளுரை நக்கீரனார துரையென்றே நிறுவிய எம்முடைய ஏதுக்களை இதுகாறும் மறுத்தார் எவரும் இலர். யாங்காட்டிய ஏதுக்களை மறாமலும், எம்மால் மறுக்கப் பட்டொழிந்த தங் கூற்றுக்களைப் பெயர்த்தும் நிலை நிறுத்திக் கொள்ளாமலுந் தாம் முதலிற் கூறிய கூற்றுக்களையே திரும்பத் திரும்பக் கூறி அவ் விழுமியவுரை நக்கீரனாரது அன்று என்னும் ஒரு போலிக் கொள்கையினை எங்கும் பரப்புதலிலேயே எமக்கு மாறாவார் கருத்துற்று நிற்கின்றனர். பழைய செந்தமிழ் நூலுரைகளின் சொற்சுவை பொருட்சுவைகளில் ஊறி, அவ்வந் நூலாசிரியர் களின் உரைவன்மை மென்மைகளையும், அவ் வவர்க்குள்ள சொற்பொருட்டிட்ப நுட்ப வேறுபாடுகளையும் நன்கு பகுத்துக் காணவல்ல நுட்ப வுணர்வினார்க்கு, அவர் அவர் பரப்பும் அப்போலிக் கொள்கையின் பெற்றி தெற்றெனப் புலப்பட்டு விடும் அத்துணை நுண்ணுணர்வு வாய்ப்பப் பெறாதார் அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/36&oldid=1590529" இலிருந்து மீள்விக்கப்பட்டது