உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

  • மறைமலையம் - 24

ளைக்

போலிக் கோட்பாட்டினைக் கண்டு மருளாமைப் பொருட்டு, இறையனார் களவியலுரையென வழங்குவது ஆசிரியர் நக்கீரனார் அருளிய உரையேயா மென்பதூஉம், அவ்வுரையின் பாயிரப் பகுதியிற் காணப்படுஞ் சில உரைக் கூறுகளும், அவ் வுரையின் இடை டயிடையே காணப்படுங் கட்ட கலித்துறைப் பாட்டுகளும், அப் பாட்டுகள் ஒரு சிலவற்றிற்கு எழுந்த ஒரு சில விளக்கவுரைச் சிறுபகுதிகளுமே பிற்காலத்த வராற் சேர்க்கப்பட்டனவா மென்பதூஉம், இ வையல்லாத ஏனை உரைப்பெரும் பகுதி முற்றும் நக்கீரனார் உரைத்த படியாகவே இன்றுகாறும் வழங்கப்பட்டு வருகின்ற தென்பதூஉம் பெயர்த்தும் ஈண்டு விளக்கிக் காட்டுவாம்:

பயில்வராது உணர்வினை இன்புறுத்தி அவரது கருத்தைத் தம்மாட்டு ஈர்க்கவல்ல தீஞ்சுவைகெழுமித் தெவிட்டா அமிழ்தமாய் விளங்கும் அரும்பெருந் தமிழ்ப்பாட்டுகளை இயற்றி இயற்றிப் பழுத்த சொல்லும் பழுத்த பொருளும் வாய்ப்பப் பெற்றாரான ஒரு மாப்பெருந் தமிழ்ப் புலவரால் இறையனாரகப் பொருள் உரை எழுதப்பட்ட தென்பதற்கு வேண்டும் அடையாளங்கள் அவ்வுரையின் முதல் இடை கடை யெங்கும் மிளிர்ந்து காணப்படுகின்றன. அவ் வடையாளங்கள் முற்றும் ஈண்டு எடுத்துக் காட்டலுறின் இது மிக விரியுமாகலான், அவற்றுள் ஒரு சிலவே காட்டுதும்.

66

இறையனாரகப் பொருள் 2 ஆஞ் சூத்திர உரையுள்

“ஆயின், இவ் வகைப்பட்ட ஆயத்திடை மேனாட் பிரிந்து பயின்றறியாதாள் தமியளாய் நிற்குமோ வெனின் நிற்கும்; தான் பயின்ற இடம் தன் ஆயத்தினோடு ஒக்குமாகலான் என்பது. யாங்ஙனம் நிற்குமோ வெனின், சந்தனமுஞ் சண்பகமுந் தேமாவுந் தீம்பலவும் ஆசினியும் அசோகமுங் கோங்கும் வேங்கையுங் குரவமும் விரிந்து, நாகமுந் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணங்கமழ்ந்து, பாதிரியும் பாவைஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து, பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகைசிறந்து, வண்டறைந்து தேனார்ந்து, வரிக்குயில்கள் இசைபாடத், தண் டென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவண், ஒரு மாணிக்கச் செய்குன்றின்மேல், விசும்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/37&oldid=1590533" இலிருந்து மீள்விக்கப்பட்டது