உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3×

29

துடைத்துப் பசும்பொன் பூத்து வண்டு துவைப்பத் தண்டேன் துளிப்பதொரு வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்; கண்டு பெரியதொரு காதல் களிகூர்ந்து தன் செம்மலர்ச் சீறடிமேற் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம் மலரணிக் கொம்பர் நடைகற்பதென நடந்துசென்று, நறைவிரி வேங்கை நாண்மலர் காய்தாள்; தாள்; கொய்தவிடத்து, மரகதமணி விளிம்படுத்த மாணிக்கச்சுனை மருங்கினதொரு மாதவி வல்லி மண்டபத்துப், போதுவேய்ந்த பூநாறு கொழுநிழற் கீழ்க் கடிக்குருக்கத்தி கொடிப் பிடித்துத் தகடுபடு சிகரங்களின் முகடுதொடுத்து ஞான்றுவந்து இழிதரும் அருவி பொன்கொழித்து மணிவரன்றி மாணிக்கத் தொடு வயிரம் உந்தி அணிகிளர் அருவி ஆடகப்பாறைமேல் அதிர் குரன் முரசின் கண்ணிரட்ட, வண்டுந் தேனும் யாழ்முரல, வரிக்குயிலுங் கிளியும் பாடத், தண்டாது தவிசுபடப் போர்த்ததொரு பளிக்குப்பாறை மணித்தலத்து மிசை நீல ஆல வட்டம் விரித்தாற்போலத் தன் கோலக் கலாவங் கொளவிரித்து முளையிள ஞாயிற்று இளவெயில் எறிப்ப ஓர் இளமயில் ஆடுவது நோக்கிநின்றாள்”

29 ஆஞ் சூத்திர உரையுள்

66

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தானும், பாங்கற் கூட்டங் கூடியானுந் தெருண்டு வரைந்தெய்த லுற்றுத் தமரை விடும்; விட்டவிடத்து அவர் மறுப்ப, அஃது இலக்கணமாகலான்; அங்ஙனம் மறுத்தவிடத்துத் தலைமகள் வேறுபடும். எம்பெருமான் மறுக்கப்பட்டமையான் மற்றொருவாறாங் கொல்லோவெனக் கலங்கி வேறுபாடு எய்தின பொழுதே தோழிக்குப் புலனாம்; புலனாயினவிடத்து, எம்பெருமாட்டி! நினக்கு இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்றென்னும், என்றவிடத்து, இஃதெனக்குப் பட்டது, இன்னவிடத்து ருஞான்று நீயும் ஆயங்களுந்தழையுங் கண்ணியுங் கோடற்கு எண்ணிச் சிறிது நீங்கினாய்; யான் நின்று ஒரு மணிச்சுனை கண்டேன்; கண்ட அம் மணிச்சுனை தான் ஆம்பலே குவளையே நெய்தலே தாமரையே என்றிப் பூக்களால் மயங்கிடும் மேதக்கது; கண்டு வேட்கையான் ஆடுவான் இழிந்தேன்; இழுக்கிக் குட்டம் புக்கேன்; புக்குத் தோழியோவென நீ அங்ஙனங் கேளாயா யினாயாக, ஒரு தோன்றல் வந்து தோன்றி எனது துயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/38&oldid=1590538" இலிருந்து மீள்விக்கப்பட்டது