உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் - 24

நீக்குதற்காகத் தன் கை நீட்டினான்; நீட்ட, யானும் மலக்கத்தான் நின்கை யெனப் பற்றினேன்; பற்ற, வாங்கிக் கரைமேல் நிறீஇ நீங்கினான்;நீ அன்று கவலுதியெனச் சொல்லேனாயினேன். நீ எவ்வெல்லைக் கண்ணுங் கைவிடாதாய்க்கு அஞ்ஞான்று கைவிடலாயிற்று விதியாகாதே? இனிப்பிறிதொன்றாங் கொல்லோவெனக் கலங்கி வேறுபட்டே னென்று தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நிற்கும்” எனவும்,

59 ஆஞ் சூத்திர உரையுள்

66

"இயற்கைப் புணர்ச்சியின் விளையாட் டொக்கல் வேற்றிடம் படர இருவருந் தம்முட் டலைப்பெய்யுமாறும், புணருமிடத்துத் தன்மையும், அது கன்மேற் பொதும்பு பட்டுக் கோட்டுப்பூவுங் கொடிப் பூவும் நிரந்து, நீர்த்துறைமேற் சித்திரப்படாம் விரித்தாலே போன்று, வண்டுந் தும்பியும் வரிக்கடைப் பிரசமும் யாழுங் குழலும் முரன்று, கடற்கரையுங் கானியாறும் முழவுத்துடியும் பாடியம்ப, இரவோரன்ன காழுநிழற்றாய், நிலவோரன்ன வண்மண லொழுகி,

அகத்தார் புறத்தாரைக் காண்டலெளிதாய்ப், புறத்தார் அகத்தாரைக் காண்டல் அரிதாய், வானோரும் விழைவைத் தவிர்த்தோரும் விரும்பும் பொழிலுள்”

எனவும், அவ்வுரையின் முதலிடை கடைகளிற் காணப்படும் இப் பகுதிகளைப் போலவே அவ் வுரையின் மற்றைப் பல இடங்களிலுஞ் செய்யுட்சுவை மலிந்த வளவிய உரைநடை காணப்படுகின்றது. இங்ஙனம் அவ்வுரையின் துவக்கம் முதல் அதன் ஈறுவரையிற் செய்யுள் நடை விரவிய

ஒரே வகையான உரைச்சுவை கிளர்ந்து திகழுதலின்,

றையனாரகப் பொருளுரையினை இயற்றினவர், செய்யுளியற்றுந் திறன்மிக்க ஒரு மாப்பெரும்புலவரா யன்றிப், பிறரொருவர் ஆகாமை செந்தமிழ்நடை வேறுபாடுகளை நன்கு பகுத்துணரவல்லார் எவர்க்கும் எளிதின் விளங்கற் பாலதேயாம். இவ்வாறு செய்யுட்சுவை தோய்ந்த உரைநடை இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகியார், நச்சினார்க்கினியர் முதலான வேறு உரைகாரர்தம் உரைகளுள் யாண்டுங் காணப்படாமையின், றையனாரகப் பொருளுரை அவ்வுரைகாரருள் ஒருவரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/39&oldid=1590543" இலிருந்து மீள்விக்கப்பட்டது