உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

31

இயற்றப்பட்ட தாகாமையும் இனிது விளங்கற்பாற்றாம். விரிந்தவுரை எழுதுதலில் வல்லாரான பேராசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் என்பவருஞ் சிற்சில டங்களில் நக்கீரனாரது உரைபோற் செய்யுள் நடை விராய விழுமிய உரை எழுத முயன்று பார்த்தனராயினும், அஃது அவர்க்கு நன்கு வாயாமையின், அவரெல்லாந் தம் உரைகளை அம்முறையில் முற்றும் எழுதமாட்டாராய் அம் முயற்சியைக் கைவிட்டனர். மேலுஞ், சூத்திரங்களின் சொற்பொருளை விடாமல் அவற்றைக் கெளவிக் கொண்டே சென்று பேருரை விரிப்பார் ஆசிரியர் நக்கீரனாரைத் தவிர வேறொருவரைக் காண்டல் இயலாது; பிறகாலத்திருந்த சிவஞான முனிவரருங்கூட நக்கீரனார்க்கு ஈடாகார்.

இனி, இளம்பூரணர், சேனாவரையர், பரிமேலழகியார் என்னும் உரைகாரர் மூவருஞ் சொற்பொருட்டிட்ப நுட்பங்கள் ப செறிந்த உரைகள் எழுதுதற்கண் வல்லுநராயினும், ளம்பூரணரும் பரிமேலழகியாருஞ் சுருக்கவுரைகளே வரைந்தனர்; சேனாவரையரோ விரிவுரை யெழுத மாட்டுவாராயினும், அவரதுரையும், ஏனை இளம்பூரணர் பரிமேலழகியார் உரையுந் திறமான சொற்செறிவுடையனவே யல்லாமல், நக்கீரனாரது உரைபோல் நெகிழவேண்டும் பதத்து நெகிழ்ந்தும், இறுகவேண்டும் பதத்து இறுகியும், நல்லிசைப் புலமை மலிந்த செய்யுட்போல் நகை, அழுகை, இழிபு, வியப்பு, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் எண்வகை மெய்ப்பாடு தோற்றுவிக்கும் எண்வகைச்சுவை வாய்ந்துஞ் செல்வன அல்ல. அதுவேயுமன்றி, அவைக்களத்தே கேட்டார்ப் பிணிக்குந் தகைத்தான பேருரை நிகழ்த்தும் பேராற்றல் வாய்ந்தோர் தாங்கூறும் பொருள் வினாவும் விடையுமாய் வைத்துத் தருக்க நூன்முறை வழாது தொடர்புபடுத்து விளக்கிச் செல்லுமாறு போலவும், சொல்லையும் பொருளையும் அடுக்கடுக்காய் நுவன்று நகைவேண்டும்பொழுது நகையும், அழுகை வேண்டும் பொழுது அழுகையும், இழிபு வேண்டும் பொழுது இழிபும், வியப்பு அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்பன வேண்டும் பொழுது அவ்வம் மெய்ப்பாடுகளு கிளர்ந்து தோன்றுமாறு சொன்மாரிபொழிந்து நிகரின்றிச் செல்லுமாறு போலவும் ஆசிரியர் நக்கீரனாரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/40&oldid=1590548" இலிருந்து மீள்விக்கப்பட்டது