உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் 24

உரையினமைப்பும் பொலிந்து திகழ்கின்றது; இத்தகைய தொரு விழுமிய அமைப்பு ஏனை யுரையாசிரியர் எவரிடத்தும் முற்றக் காணப்படுகின்றிலது. பேராசிரியர் இவ்வுரையமைப்பைப் பின்பற்றிச் செல்லச் சால விழைந்தனரேனும், ஒரோவொரு காலன்றி அஃது அவர்க்கு முற்றுங் கைகூடிற்றில்லை. இங்ஙனமாக ஏனை எவரானும் ஆக்குதற்கேலாத ஆசிரியர் நக்கீரனாரது உரையின்மாட்சி, அவ்வுரையின் முதல் இடை கடை யென்னும் மூன்றிடங் களினின்றும் மேலெடுத்துக் காட்டிய உரைக்கூறுகளால் இனிதுவிளங்கா நிற்கும். என்றாலும், ஈண்டு எடுத்துக்காட்டிய அவரது உரையின் நலந் தெற்றெனப் புலனாதற் பொருட்டு, அதன்கணிருந்து மீண்டும் ஓர் உரைப் பகுதியினை ஈண்டெடுத்துக் காட்டுதும்:

35ஆம் சூத்திர உரை

டை

"இனி ஓதற்குப் பிரியும் பிரிவு முன்வைக்கப்பட்டது; தலையான பிரிவாகலானும், உயர்ந்தோர்க்கு உரித்தாகலானும் என்பது. பரத்தையிற் பிரிவு பின்வைக்கப்பட்டது, காமம் பின்வைத் தெண்ணப்படுமாகலான் என்பது. அஃதேயெனின், இவர் முன்பொருவிறந்தார் என்பதனொடு மாறு கொண்டது இச்சூத்திரம்; என்னையோவெனின், தலைமகளை எய்தியிருந்தே வன் ஓதுவான் பிரிவானெனின், முன்ஞானமிலனாம்; இலனாகவே, ஞானத்தின் வழியது ஒழுக்கமாகலானும் ஒழுக்கத்தின் வழித்துத் தலைக் குலமாகலானும் வை யெல்லாங் குறைவுபட்டனா மென்பது. இனிக் காவல் என்பது இவன் நாட்டைப் பிறர் புகுந்து அலைப்பதுங் கொள்வதுஞ் செய்ய அவரை நீக்குதற்கு நீங்குமேயெனின் ஆண்மையிற் குறைபட்டானாம் என்பது. இனிப் பகை தணிவினை யென்பது சந்துசெய்வித்தற்குப் பிரிவது, அங்ஙனம் பிரியுமேயெனின் தூதுவனாயினானாம்; தூதுவராவார் பிறர்க்குப் பணிசெய் வாழ்வாராவர், அவரது பொருவிறப்பு என்னையோவென்பது. இனி வேந்தற்குற்றுழிப் பிரியுமெனின், கருமச்சேவகனாம்; கருமஞ் செய்வதென்பது இறப்பவும் இளிவந்ததோர் ஒழுக்கம்; பிறர் குறிப்பின்றித் தன் குறிப்பில்லை யெனப்படும்; ஆதலின் அவரது பொருவிறப்பு என்னையோவென்பது. இனிப் பொருள்வயிற் பிரியுமே யெனின், முன்னர்ப்பொருள் இலன்

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/41&oldid=1590552" இலிருந்து மீள்விக்கப்பட்டது