உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

35

நின்ற உணர்வினை மறைப்பிக்கும்; என்னை? இரண்டுணர்வு உடன் நில்லாமையின் அவ்வகை மறைப்ப இவர் கண்ணதே உள்ளமாமென்பது; என்னை? தாம் இயல்பாகவேயும் பிறரான் நயக்கப்படும் வனப்புடையார் ஆடற்றகையானும் பாடற் குரலாலும் நயப்பித்துக் கொள்வமென்று எடுத்துக்

காண்டால், அவர் கண் நயப்புச் சொல்ல வேண்டுமோ மென்பது.

இவ்வாறாக, 'இறையனாரகப் பொருளில்’ அறுவகைப் பிரிவினை யுணர்த்தும் “ஓதல் காவல்” ஓதல் காவல்” என்னும் 35 ஆஞ் சூத்திரத்திற்கு ஆசிரியர் நக்கீரனார் விரித்த இவ்வுரைப் பகுதி தருக்க இயைபுஞ், சொற்பொருளடுக்கு முடைத்தாய்ப், பாச்சுவை விராய உரை நடைத்தாய்ப், பண்டைக் காலச் செந்தமிழ் வளந்துறுமி அகன்று ஆழ்ந்து தெளிந்து நிற்றல் காண்க. இத்தகையதோர் உரை, இளம்பூரணர் முதலான ஏனை யுரைகாரர் எவரானும் யாண்டும் எழுதப்பட்டதின்று. ஓதல் பகையே தூதிவை பிரிவே" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு (பொருள், அகத்திணை இயல், 27) இளம்பூரணர் உரைத்த உரையெல்லாம்,

66

"ஓதற்குப் பிரிதலாவது, தமது நாட்டகத்து வழங்காது பிறநாட்டகத்து வழங்கும் நூல் உளவன்றே, அவற்றினைக் கற்றல்வேண்டிப் பிரிதல். பகைவயிற் பிரிதலாவது மாற்று வேந்தரொடு போர் கருதிப் பிரிதல். தூதிற்குப் பிரிதலாவது இருபெருவேந்தரைச் சந்துசெய்தற்பொருட்டுப் பிரிதல்”

என்னும் இவ்வளவே. இனிப் பேராசிரியர் 'திருச்சிற்றம் பலக்கோவையார்' உரையில் அறுவகைப் அறுவகைப் பிரிவுகளை விளக்கியோதிய உரைக்கூறுகள் வருமாறு:

வ் வண்ணம் முன்னர் ஓதலின்றி இவளை வரைந்த பின்னர் ஓதநின்றானோவெனின், அல்லன்; முன்னர் இவனைப் பொருவிறந்தா னென்று கூறப்படுதலால் ஓதி முடித்தா ரென்பது: இவன் தான் ஓதிய புருடார்த்தமாகிய தருமார்த்த காமங்களை ஒழிய வேறு புருடார்த்தமாகக் கூறப்படுவன உளவோ வென்பதனை ஆராயவேண்டுங் கருத்தினனாத லானும், கல்வியாற் றன்னிற் றாழ்ந்தாரைத் தனது கல்விமிகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/44&oldid=1590567" இலிருந்து மீள்விக்கப்பட்டது