உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் - 24

66

காட்டி அவர்களை யறிவித்தல் தருமநூல் விதியாதலானும் பிரியும் என்பவாகலின்” (308 ஆஞ் செய்யுள். முகவுரை) “இனிக் காவற்பிரிவென்பது, எல்லாவுயிர்களையும் அரசன் பாதுகாக்க வென்னுந் தரும நூல்விதியான் அக் காவற்குப் பிரிதல்" (312ஆஞ் செய்யுள் முகவுரை). “இனிப், பகைதணிவினைப் பிரிவென்பது, தம்மிற் பகைத்தவேந்தரைப் பகையைத் தணித்து இருவரையும் பொருந்தப்பண்ணுதல்” (314ஆஞ் செய்யுள் முகவுரை.) “இனி, வேந்தற் குற்றுழிப் பிரிவென்பது ஒரு வேந்தனுக் கொருவேந்தன் தொலைந்து வந்தடைந்தால் அவனுக் குதவிசெய்யப் பிரியாநிற்றல்" (316ஆஞ் செய்யுள் முகவுரை). “இனிப், பொருள் வயிற்பிரித லென்பது, குரவர்களாற் படைக்கப்பட்ட பொருள்கொண்டு இல்லறஞ் செய்தால் அதனான் வரும் பயன் அவர்க்கு ஆம் அத்துணையல்லது தமக்காகாமையால், தமது பொருள்கொண் டில்லறஞ் செய்தற்குப் பொருள்தேடப் பிரியாநிற்றல்" (332 ஆஞ் செய்யுள் முகவுரை). இனிப், பரத்தையிற் பிரிதலென்பது, தலைமகளை வரைந்தெய்திய பின்னர் வைகலும் பாலே நுகர்வான் ஒருவன் இடையே புளிங்காடியும் நுகர்ந்து அதன் இனிமை யறிந்தாற் போல, அவள் நுகர்ச்சியினிமை அறிதற்குப் புறப் பெண்டிர்மாட்டுப் பிரியாநிற்றல். அல்லதூஉம், பண்ணும் பாடலும் முதலாயின காட்டிப் புறப்பெண்டிர் தன்னைக் காதலித்தால் தான் எல்லார்க்குந் தலைவனாகலின், அவர்க்கும் இன்பஞ்செய்யப் பிரியா நிற்றல் என்றுமாம். அல்லதூஉந், தலைமகளை ஊடலறி வித்தற்குப் பிரிதலென்றுமாம். இவ்வா றொழிந்து தனக் கின்பம் வேண்டிப் பிரிவனாயின், 'கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண்டொடி கண்ணே யுள" என்பதனால், இவளுக்குத் தலைமகளென்னும் பெயரொடு மாறுபட்டுத் தனது பெருமையொடும் மாறுபடாநிற்கும்” (352 ஆஞ் செய்யுள் முகவுரை.)

இளம்பூரணர், பேராசிரியர் என்னும் ஈருரைகாரரரும் உரைத்த இவ் வுரைக்கூறுகளை, மேலெடுத்துக் காட்டிய ஆசிரியர் நக்கீரனாருரைப் பகுதியோடு ஒப்பிட்டுக் காணவல்ல அறிஞர்க்குப்,பளபளப் அறிஞர்க்குப், பளபளப்பான பலநிறச் சலவைக் கற்கள் அழுத்திப் பொன்மினுக்குப் பூசிப், பலபல அடுக்குமாடங்கள் உடைத்தாய் வான்முகடு அளாய்க், காண்பார் கண்ணுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/45&oldid=1590571" இலிருந்து மீள்விக்கப்பட்டது