உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

L

37

கருத்துங் கவரும் நீர்மைத்தாய் உயர்ந்தோங்கி நிற்கும் எழுநிலை மாடம்போல் ஆசிரியர் நக்கீரனாரதுரை நிவந்து நிற்றலும், அம்மாடத்தின் அருகே புல்வேய்ந்த குடிலும் ஓடு மூடியதொரு சிற்றிலும் ஏழைமைத் தோற்றமுடையவாய்த் தாழ்ந்துநிற்றல் போல் இளம்பூரணர் பேராசிரியருரைகள் பீடுகுறைந்து நிற்றலும் பிரிந்தினிது விளங்காநிற்கும். நக்கீரனாருரையும், மேற்காட்டிய ஏனையிருவருரையுந் தன்மையால் வேறுபடு தலோடு, கொள்கை வகையாலும் வேறுபடுகின்றன. ஓதற்பிரிவு, பகைவயிற் பிரிவுகட்கு இளம்பூரணர் கூறியவுரை, நக்கீரனார் உரை க்கு மாறாய்நிற்பத், தூதிற்பிரிவுக்கு அவர் கூறியவுரை, நக்கீரனார் கூறிய ஒரு சொற்றொடரை எடுத்தாண்ட வளவில் நிற்றலுங் காண்க. மற்றுப் பேராசிரியருரையோ, இளம்பூரண ருரையினுஞ் சிறிது விரிவுடைத்தாயினும், பிற்காலத்து வடசொற்குறியீடுகளுடைத்தாய், நக்கீரனாருரையின் சொற்கள்

சொற்றொடர்களை யெடுத்தாண்டு, அவருரைப்பொருளொடு பெரும்பான்மை யொத்துச் சிறுபான்மை யொவ்வாது, அவ ருரைநலத்தின் மிகச்சிறிதே தன்கட்கொண்டு நிற்கின்றது. இங்ஙனந் தன்மையானுங் கொள்கைவகையானும் இவ்விருவ ருரையும் நக்கீரனாருரையின் வேறாக நிற்றலானும், நக்கீரனாருரையின் சொற்றொடர்களை யெடுத்தாளலானும் அவ்வுரைகளை வகுத்த இளம்பூரணர் பேராசிரிய ரென்னும் இருவர் தம் மனவியற்கையும் நக்கீரனாரது மனவியற்கையின் முற்றும் வேறாதலுந் தெற்றெனப் புலனாம்.

இறையனாரகப் பொருளுரையினை இயற்றிய ஆசிரியரின் புலமைத்திறம் பெருமாட்சித்தாதலும், தொல்காப்பிய உரையினையியற்றிய இளம்பூரணரின் திறம் அத்துணை மாட்சித்து அன்றாதலும் நுண்மாண் நுழைபுல முடையார்க்கெல்லாம் வெள்ளிடைமலைபோல் விளங்கிக் கிடப்பவும், இஞ்ஞான்று வழங்கும் இறையனார் களவிய லுரையினை யினை யியற்றினவர் இளம்பூரணரே யாதல் வேண்டு மெனச் 'சேரன்செங்குட்டுவன்' நூலார் கூறினர்." இவ்வாறு கூறுதற்குக் களவிய லுரையிலுந், தால்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணர் உரையிலும் பொதுப்போற் காணப்படும் இரண்டு உரைக்குறிப்புகளே அவர்க்குப் பெருஞ் சான்றுகளாய்த் தோன்றுகின்றன. களவியல் முதற்சூத்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/46&oldid=1590576" இலிருந்து மீள்விக்கப்பட்டது