உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மறைமலையம் - 24

ப்

உரையின் ஈற்றில் 'என்மனார்' என்னுஞ் சொல்லுக்குக் காட்டப் பட்டிருக்குஞ் சொன்முடிபும், அதன் ஏழாஞ்சூத்திரவுரையின் ஈற்றிற் காட்டப்பட்டிருக்கும் ‘வரவு' என்னுஞ் சொல்வழக்கும் ஆண்டுள்ளவாறுபோல், தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணருரையினுங் காணப்படுகின்றன. இவ்வாறு இருவர் உரையினும் பொதுவாகக் காணப்படும் இவ்விரு குறிப்பு களையுந் தம்முரையுள் மறுத்தபின் உரைகாரரான சேனாவரையர் அக்குறிப்புகளை இளம்பூரணருடையவாக வைத்து மறுத்தனரேயன்றி, நக்கீரனாருடையவாக வைத்து மறுத்திலாமையின்," அவ்வுரைக்குறிப்புகள் இரண்டையும் உடைய களவியலுரை இளம்பூரணர் இயற்றியதொன் றென்று கோடலே ‘செங்குட்டுவன்’ நூலாரது கோள்.

இனி, இவர் எடுத்துக்காட்டிய அவ் வுரைக்குறிப்புகள் ரண்டையும் இளம்பூரண ருரைகளாக வைத்து, அவ்விளம் பூரணருக்குப் பின்வந்த சேனாவரையர், தொல்காப்பியச் சால்லதிகாரத்திற்குத் தாம் வரைந்த உரையில் மறுத்திருப்பது கொண்டு, அவ் வுரைக்குறிப்புகள் இரண்டு மட்டுமே காணப்படுங் 'களவியலுரை' முழுவதூஉம் இளம் பூரணரே இயற்றியதாமெனல் யாங்ஙனம் பொருந்தும்? ஒருவர் உரையில் உள்ள சொற்களையுஞ் சொற்றொடர் களையும் பொருள் களையும், அவர்க்குப் பின்வரும் உரைகாரர் தமதுரையில் நிரம்ப எடுத்தாள்வது தொன்று தொட்ட வழக்கமா ருக்கின்றது. இஃது இளம்பூரண ருரையினையும் அவர்க்குப் பின்வந்த பேராசிரியர் சேனாவரையர் நச்சினார்க்கினிய ருரைகளையும் ஒத்து நோக்குவார்க்கு நன்குவிளங்கும். இளம்பூரணருரையிற் காணப்படும் உரைப் பகுதிகள் பல ஏனை உரைகாரர் உரைகளிற் காணப்படுதல் கொண்டு, அவருரைகளை யெல்லாம் இளம்பூரணருரை யென்று கோடல் அடுக்குமோ? அடாதன்றே. அதுபோலவே, இளம் பூரணருரையிற் காணப்படும் இரண்டு சிறு உரைக் குறிப்புகள் மட்டும் 'இறையனாரகப் பொருளுரையிற்' காணப்படுதல் கொண்டு, அவ்வுரைமுற்றும் இளம் பூரணருரைத்ததே என்று கோடலினும் பெரியதோர் இழுக்கான உய்த்துணர்ச்சி வேறு யாண்டுமிலது. இறையனாரகப் பொருளுரைப் போக்கும். இளம்பூரணருரைப் போக்கும், ஒன்றையொன் றொவ்வாமற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/47&oldid=1590581" இலிருந்து மீள்விக்கப்பட்டது