உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

39

பெரிதும் வேறுபட்டுக் கிடக்குமாற்றினை, அவருரைகளி னின்றும் மேலெடுத்துக் காட்டிய உரைப்பகுதிகளால் நன்கு விளக்கிக் காட்டினேம்.

அதுவேயுமன்றி, நக்கீரனார் சொற்றொடர்களை அமைக்கும் முறையோ, இளம்பூரணர் முதலான ஏனை உரைகாரர் அவற்றை அமைக்கும் முறைக்கு முற்றும் வேறானதொரு தன்மைத்தா யிருக்கின்றது. ஒரு பொருண்மேல் வரும் பல சொற்றொடர்களை அவர் ஒருவரிசைப்படத் தொடுக்குந் திறமும் அழகும் பெரிது பாராட்டற்பாலதான தனிச்சிறப்பு வாய்ந்து மிளிர்கின்றன; ஒருசொற்றொடரை முடித்து, அதனோடு இயைபுடைய பிறிதொரு சொற்றொடரைத் தொடங்குகையில், முடித்த சொற்றொடரின் ஈற்றிலுள்ள வினைமுற்றுச் சொல்லையேவினையெச்சமாகத் திரித்து, அதனை அதற்கடுத்த சொற்றொடரின் முதற்கட் பெய்து தொடங்கிச் செல்கின்றார்; மேலே 918 ஆம் பக்கம் முதல் 920 ஆம் பக்கம் வரையில் எடுத்துக் காட்டிய இறையனாரகப் பொருளுரைப்’ பகுதிகளில் தடித்த எழுத்திற் பதிப்பித்திருக்குஞ் சொற்களைக் காண்க; “வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்” என்று முதலில் ஒரு சொற்றொடரை முடித்தவர், அச் சொற்றொடரின் ஈற்றில் உள்ள கண்டாள்' என்னும் வினைமுற்றைக் ‘கண்டு' என்னும் வினையெச்சமாகத் திரித்து அதனை முதற்கட்பெய்து அடுத்த சொற்றொடரைத் தொடங்குதலும் இங்ஙனமே அதற்கடுத்த தொடரை அவர் எழுதிக்கொண்டு போதலும் உற்றுநோக்குக. இத்தகையதொரு சொற்றொடரமைப்பு 'இறையனார்களவியலுரை'யின் துவக்கம் முதல் அதன் முடிவு வுரையிற் காணப்படுமாறுபோல, இளம் பூரணருரையிலாதல் ஏனை உரைகார ருரையிலாதல் காணப்படாமையின், களவியலுரை, அவ்வுரை யெழுந்த தற்கு இயைந்த பேராற்றல் வாய்ந்த ஆசிரியர் நக்கீரனாரால் இயற்றப்பட்டதாகுமேயன்றி ளம்பூரணர் முதலான

ஏனையோருள் ஒருவரால் இயற்றப்பட்டதாகாது.

மேலும், "வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற் போல" எனவும், “பள்ளத்துத்துவழி வெள்ளம்போல” எனவும், “யானை தாடு வுண்ணின் மூடுங்கலம் இல்லது போல" எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/48&oldid=1590586" இலிருந்து மீள்விக்கப்பட்டது