உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

40

  • மறைமலையம் - 24

'கடல்வெதும்பின் வளாவுநீர் ல்லது போல" எனவும், கெடுத்துத் தேடும் நன்கலம் எடுத்துக் கொண்டாற்போல' எனவும், “மணிக்கலங் கதுவாய்ப் பட்டது போல” எனவும், “உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர்,கொண்டார்க் குரியர் கொடுத்தார்”எனவும், “மூடியிருந்து வேவதொரு கொள்கலம் மூய்திறந்தவிடத்து ஆவியெழுந்து முன்நின்ற வெப்பம் நீங்கினாற்போல" எனவும், “யாறு வருகின்றதென்று ஆடை தலைச் சூடாரன்றே” எனவும், "வண்டோரனையர் ஆடவர் பூவோரனையர் மகளிர்” எனவும், 'இறையனார் களவியலுரையில் ண்ட ஈண்டுக் காணப்படும் பண்டைக் காலத்துச் செந்தமிழறிஞர் தம் முதுமொழிகள் போல்வன, இளம்பூரணர் முதலான ஏனையுரையாசிரியர் தம் உரைகளிற் காணப் படுகின்றில. இவ்வாற்றானும் 'இறையனார் களவியலுரை நக்கீரனார் இயற்றியதாவதல்லது ஏனையோர் இயற்றியதாகாமை 'உள்ளங்கை நெல்லிக்கனி போற் றெற்றெனப் புலனாம். இதுகொண்டு, சான்றோர்தம் முதுமொழிகளை இடையிடையே மடுத்து உரை எழுதுதலில் ஆசிரியர் நக்கீரனார் வேட்கை மிகுதியும் உடையராதல்போல ஏனையுரைகாரர் இருப்பக் காணாமையின், விருபாலர்க்குமுள்ள

அவ்

இயற்கை

வேறுபாடுகளைப் பகுத்துணர்ந்து கடைப்பிடித்துக்கொள்க.

இவையெல்லாம் ஒக்கும்மன்; இறையனார் களவிய லுரையிலுந், தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணருரை யிலும் பொதுமையிற் காணப்படுவனவாக மேலெடுத்துக் காட்டிய ய இரண்டுரைக் குறிப்புகளையும், பின்வந்த சேனாவரையர் நக்கீரனார் மேலனவாக வைத்துரையாது, இளம்பூரணர் மேலவாக வைத்துரை கூறியதென்னை யெனின்; சேனாவரையர் காலத்து வழங்கிய 'களவியலுரை’ ஏட்டுச் சுவடிகளில் அவ் விரண்டுரைக் குறிப்புகளுள் ஒன்றுகாணப் படாமல், தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணர் உரையில் மட்டும் அது காணப்பட்டமையின், அது தன்னை இளம்பூரணர் மேலதாக வைத்துச் சேனாவரையர் மறுத்திட்டார். எனவே, சேனாவரையர் காலத்திற்குப் பின்வந்த களவியலுரை ஏட்டுச் சுவடிகளின் மட்டுமே, அவ் விரண்டில் ஒன்று இளம்பூரண ருரையிலிருந்து எடுத்துச் சேர்க்கப்பட்டதாதல் வேண்டு மென்பது பெறுதும். அதனானன்றே, அது நக்கீரனா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/49&oldid=1590590" இலிருந்து மீள்விக்கப்பட்டது