உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

41

ருரையினகத்தே காணப்படாமல் 'இறையனாரகப் பொருள்' முதற்சூத்திர உரையின் முடிவில் அதற்குப் புறம்பாய்க் காணப்படுவதாயிற் றென்பது. ஒருவருரையில் மற்றொருவ ருரையினைச் சேர்க்கலுறுவார், அவ் வுரையின் இடையே அதனைச் சேர்த்தற்கு இடங்காண்டல் அரிதாகலின், அதன் ஈற்றிலே அதனை எளிதாகச் சேர்த்து விடுவர். இவ்வியல்புக்கு ஒப்பவே, இளம்பூரண ருரைக்குறிப்பு ஒன்றை, நக்கீரனாரது களவிய லுரையிற் சேர்க்க வேண்டினார் ஒருவர், அதற்கு அவ்வுரையின் அகத்தே இடங் டங் காணாமையின், அதன் ஈற்றின்கண்ணே அதற்குப் புறம்பாய் அதனைச் சேர்க்கலாயினா ரென்க. அற்றேற், களவியல் முதற் சூத்திரத்திற் போந்த ‘என்மனார்' என்னுஞ் சொல்லின் முடிபை நக்கீரனார் கூறாதுவிட்ட தென்னையெனின்; நக்கீரனார் பேருரை வகுக்குங் குறிப்பினராகலின், தமதுரைக்கு வேண்டப்படாத சொன் முடிபுகளைக் கூறிற்றிலர்; அதனால் ‘என்மனார்’ என்னுஞ் சொல்லுக்கு அவர் முடிபு கூறாதுவிட்டது ஒரு குறை பாடாகாதென விடுக்க. மற்றுப், பிற்காலத்து வந்தார் ஒருவர் அச்சொல்லுக்கு முடிவுகாட்டல் வேண்டினாராகலின், அவரே அதனை இளம்பூரண ருரையிலிருந்தெடுத்துக், களவியல் முதற்சூத்திரவுரையி னிறுதியிற் சேர்த்து விட்டாரென்க.

இனி, இறையனாரகப் பொருள் ஏழாஞ் சூத்திர வுரையில் ‘வரவு’ என்னும் சொல்வழக்குக்கு நக்கீரனார் உரைத்த உரையுந், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் “தருசொல்வருசொல் ஆயிரு கிளவியுந், தன்மை முன்னிலை ஆயீரிடத்த”என்னுஞ் சூத்திரத்திற்கு இளம்பூரணர் கூறிய, உரையுந் தம்முள் மாறுபட்டு நிற்கின்றன. 'வருதல்' என்னும் வினை இச் சிறப்புச் சூத்திரங் கூறுமாறு தன்மை முன்னிலை என்னும் ஈரிடத்தின் கண் வரற்பாலதாகவும், அதனை விட்டு அஃது இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல்”எனக் களவியற் சூத்திரத்திற் படர்க்கை யிடத்தின்கண் வந்தமை வழுவாம் போலுமென மயங்கும் மாணாக்கற்கு அம்மயக்கந் தீர்த்தற்பொருட்டாகவே, நக்கீரனார்,

செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினும் நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லுந்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/50&oldid=1590595" இலிருந்து மீள்விக்கப்பட்டது