உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் - 24

தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூ விடத்தும் உரிய என்ப

99

(தொல்காப்பியம், சொல், 28)

என்னும் பொதுச் சூத்திரத்தில் அது படர்க்கை யிடத்திற்குஞ் சிறுபான்மை யுரித்தாதலை விளக்கிக் காட்டினார். நக்கீரனார் கூறிய இவ்வுரைக்கு இணங்கவே, சேனாவரையருந் “தருசொல் வருசொல்” என்னுஞ் சூத்திரத்தில் வருசொல்லைப் படர்க்கை இடத்திற்கும் அமைத்துத் “தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது. என்னுஞ் சான்றோர் செய்யுளையும் அதற்கு இலக்கியமாக் காட்டினார். மற்று, இளம்பூரணரோ 'செலவு' ‘வரவு’ ‘தரவு' 'கொடை' என்னுஞ் சொற்கள் நான்குங் கொடைப் பொருளை உணர்த்துமெனக் கூறித், “தூண்டில் வேட்டுவன் வாங்கவாராது” என்னுஞ் செய்யுளை அதற்குப் புறனடையாக எடுத்துக் காட்டினார். இளம்பூரணர் கூறிய இவ்வுரை

யாக

தால்லாசிரியர் வழக்கொடு முரணுதலின், அச்சொற்களுட் 'கொடுத்தல்' 'தருதல்' என்னும் இரண்டொழியச் 'செல்லுதல்’ ‘வருதல்' என்னும் மற்றிரு சொற்களுங் கொடைப் பொருளை உணர்த்தா என்பதூஉம், இளம்பூரணர் தாமே புறனடை எடுத்துக் காட்டிய “தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது என்னுஞ் சான்றோர் செய்யுளே அதற்குச் சான்றா மென்பதூஉம் போதரச் சேனாவரையர்" இந்நான்குங் கொடைப் பொருளன வென்று உரையாசிரியர் கூறினாராலெனின்; தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது என்பதனை அமைத்தாராகலின், அவர்க்கு அது கருத்து அன்று என்க.” எனப் பணிவுகாட்டி அவரை மறுத்திட்டார்.சேனாவரையர் மறுத்த இவ் விளம்பூரண ருரைப் பகுதிக்கும், ஆசிரியர் நக்கீரனார் அச்சொற்கள் நான்கும் பற்றிக் கூறிய உரைப்பகுதிக்கும் ஏதோரொற்றுமையும் இன்மை அவ்விரு நூலுரைகளை நன்காராய்ந்தார்க் கெல்லாம் இனிது விளங்கிக் கிடப்பவுஞ், 'சேரன்செங்குட்டுவன்' நூலார் அவற்றை நன்காய்ந்து பாராது, தாம் பிடித்ததை எங்ஙனமாயினும் நிலைப்படுத்தி விடுதல் வேண்டுமென எழுந்த பற்றினால் அறிவு மருண்டு நக்கீரனார் வரைந்த களவிய லுரையை இளம்பூரணர தென்றுரைத்து இழுக்கினார். நக்கீரனார் ‘செல்லுதல்’ ‘வருதல்’ என்னுஞ் சொற்கள் கொடைப்பொருளை யுணர்த்து மென்று கூறிற்றிலர்; இளம்பூரணரோ அவையுங் கொடைப் பொருளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/51&oldid=1590600" இலிருந்து மீள்விக்கப்பட்டது