உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

43

யுணர்த்து மென்று கூறினர். நக்கீரனார் “தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது” என்னுஞ் சான்றோர் செய்யுளை, 'வருதல் என்னுஞ்சொல் படர்க்கை யிடத்தில் வருதற்கு இலக்கியமாகக் காட்டினர்; இளம் பூரணரோ அச்சொல் தாங்கூறிய கொடைப் பொருளில் அடங்காது வேறாய் நிற்றற்கு அதனைப் புறனடை இலக்கியமாய்க் காட்டினார். வ்வா றிருவர் உரையும் ஒன்றினொன்று மாறுபட்டு நிற்றல் வெள்ளிடைமலை போல் விளங்கிக் கிடப்பவுஞ் 'செங்குட்டுவன்’

விரண்

நூலார்

அவ்

னையும் ஒரு பெற்றியவாக வைத்து மயங்கிக் கொண்டு, இளம்பூரணருரையை அவர்க்குரிய 'உரையாசிரியர்' என்னும் பெயராற் கூறி மறுத்த சேனாவரையர், அதனோடு ஒப்பதாகிய களவியலுரையை நக்கீரனார் பெயராற் சொல்லாமையின் அக் களவியலுரை இளம்பூரணர் இயற்றியதே யாதல் வேண்டுமெனப் பெரிதும் பிழைபட உரைத்தார். களவியலுரையும் இளம்பூரண ருரையும் ஒரே பொருளைப் பற்றியெழுந்து ஒரு தன்மைப்பட நிற்குமாயின், இளம்பூரணருரை யென்று கொண்டு மறுத்த சேனாவரையர், அதற்குமுன் னிருந்த களவியலுரையிலுங் காணப்படும் அதனை இளம்பூரணர் மேற்றாக வைத்து மறுத்தது என்னை? என்பது ஆராயற்பாற்றாம். அங்ஙனம் அவை ஒரு தன்மைப்பட நிற்றலைக் கண்டவிடத்தும், அவ்வொற்றுமை யாகிய ஒரு சிறு சான்றினைக்கொண்டு கதுமென ஒருவ ருரையினைப் பிறரொருவ ருரையாக மயங்கவைத்தலுங் குற்றமாம்; என்னை? சேனாவரையர் காலத்துக் களவியலுரை ஏட்டுச் சுவடிகளிற் காணப்படாத சில உரைப்பகுதிகள் அவர்க்குப் பிற்பட்ட காலத்தவரால் அதன்கட் சேர்க்கப்பட் டிருத்தலுங் கூடுமாகலின் என்பது. எனவே, சேனாவரையர் “தருசொல் வருசொல்” என்னுஞ்சூத்திரவுரையில் எடுத்து மறுத்த இளம்பூரண ருரைப் பகுதிக்கும், ஆசிரியர் நக்கீரனார் 'களவியலுரை’ 7ஆஞ் சூத்திர வுரையில் 'வருசொல்' வழக்குப்பற்றி யுரைத்த உரைப் பகுதிக்கும் ஏதோர் இயைபுங் காணப்படாமையின், சான்றல்லா அதனைச் சன்றாகக்கொண்டு நக்கீரனாருரையை இளம்பூரண ருரையாகப் புரட்டிவிடத்துணிந்த ‘சேரன் செங்குட்டுவன நூலாரது செயல் சிறுதுரும்பினைப் புணையாகப் பற்றிக்கொண்டு ஆழ்ந்ததொரு குட்டத்தின்கட் புக்கோன் செயலோ டொப்புமை யுடைத்தாய் முடிந்தமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/52&oldid=1590604" இலிருந்து மீள்விக்கப்பட்டது