உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

  • மறைமலையம் - 24

அற்றேல் அஃதாக,சேனாவரையர் காலத்திற்கு முன்னரே, நக்கீரனார் 'இறையனாரகப் பொருளுக்கு' பாருளுக்கு' எழுதிய உரை உண்டென்பது எற்றாற் பெறுதுமெனின்; 'இறையனாரகப் பொருள்' கஅஆஞ் சூத்திரவுரையில் “அஃதேயெனின் அறியக் 'கிளக்கப்பட்ட இடம்' என்னாது ‘கிளந்தஇடம்' என்றது எற்றிற்கோ வெனின், வினைச் சொற்கள் நான்கு விகற்பம் உடைய; யாவை அவ்விகற்ப மெனின், கருத்தன் ஏதுக் கருத்தன், கருவிக் கருத்தன், கருமக்கருத்தன் என இவை; அவற்றுட் கருத்தனென்பது, தச்சனெடுத்த மாடம், கொல்லன் செய்த வாள்; ஏதுக் கருத்தனென்பது ஏவினானைக் கருத்தாவாகச் செய்வது, அரசர் தொட்ட குளம், அரசர் எடுத்த தேவகுலம் என இத் தொடக்கத்தக்கன; இனிக் கருவிக் கருத்தனென்பது, வாள்எறியும், சுரிகை குற்றும், இம்மிடா நாற்குறுணி, அரிசிச் சோறு அடும் என இத் தொடக்கத்தன; கருமக் கருத்தன் என்பது, திண்ணைமெழுகிற்று, கலங்கழுவிற்று, மரங் குறைத்தது என்று சொல்லுவது என ஆசிரியர் நக்கீரனார் விளக்கிய உரைக் கூற்றிற் போந்த 'கருமக்கருத்தன்' என்பதனைச் சுட்டிச் சேனாவரையர், தொல்காப்பியச் சொல்லதிகார 269 ஆஞ் சூத்திரவுரையில், “செயப்படு பொருளை வினைமுதல் வாய்பாட்டாற் கிளத்தலேயன்றி, எளிதின் அடப்படுதல் நோக்கி, அரிசி தானே யட்டது எனச் செயப்படுபொருளை வினை முதலின்றொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபு என்றற்குத் ‘தொழிற்படக் கிளத்தலும்” என்றார்; இதனைக் கருமக்கருத்தன் என்ப” எனக் கூறியிருத்தலின், சேனாவரையர் காலத்திற்கு முற்றொட்டே நக்கீரனாரது களவியலுரை உண்டென்பதூஉம், அதனைச் சேனாவரையர்

நன்

கு

பயின்றிருந்தன ரென்பதூஉம்பெறப்படும். இவ்வாறே, இளம்பூரணரது தால்காப்பிய வுரைக்கு முன்னும் நக்கீரனாரது களவியலுரை யுண்டென்பதற்குச் சான்றுண்டோ வெனின்; உண்டு; யாம் மேலே காட்டியவாற்றால் (626,627,628 ஆம் பக்கங்கள்), நக்கீரனாரது களவியலுரைச் சொற்றொடர் களையும் கருத்துகளையும் இளம்பூரணர் ஆங்காங்குத் தழுவி யுரைவரைந் திருத்தல் அறியப்படும்; அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிகவிரியும்; ஆகலின், நக்கீரனார் களவியல் நூற்பாயிர வுரையிலும், களவியல் முதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/53&oldid=1590609" இலிருந்து மீள்விக்கப்பட்டது