உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

45

சூத்திரவுரையில் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்பவற்றிற்குக் கூறிய வுரைப் பகுதிகளிலும் உள்ள சொற் பொருள்களை இளம்பூரணர் அங்ஙனமே எடுத்துத் தொல்காப்பிய எழுத்ததிகாரப் பாயிரவுரையிலும், பொருளதி கார முதல் கரு வுரிப்பொருட் சூத்திரவுரையிலும் எழுதிச் செல்லுதலை ஒப்பிட்டுக் கண்டுகொள்க.

னி, 'இறையனாரகப் பொருள்' உரைப்பாயிரத்தில், தமிழ்முச்சங்க வரலாறும் நக்கீரனார் உரைவந்த வரலாறுங் கூறாநின்ற சில உரைப்பகுதிகளைக்கொண்டும், நூலின் உரையகத்தே எடுத்துக்காட்டாக வந்துள்ள 'கட்டளைக் கலித்துறை’ச் செய்யுட்களைக் கொண்டும், இறையனராகப் பொருளுரை முழுவதூஉங் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின் இயற்றப்பட்டதொன்றாகல் வேண்டுமென்றும், அக்கலித் துறைச் செய்யுட்களிற் புகழ்ந்துரைக்கப்படும் பாண்டிவேந்தன் காலத்திருந்து பத்துத் தலைமுறை கணக்குச்செய்ய நக்கீரனாருங் கடைச்சங்கமும் இருந்த காலங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு மேற் செல்லாதென்றுஞ் 'சேரன்செங்குட்டுவன்' (பக்கம்,178-180) நூலார் கூறினர். இக் கூற்றுக்களின் பிழைபாடும் ஆராய்ந்து காட்டுதும்:

‘களவியல்’ முதற்சூத்திரத்திற்கு ஆசிரியர் நக்கீரனார் உரை யுரைக்கும் முன் அதற்குப் பாயிரவுரையும் அவர் தாமே உரைத்திட்டார். அந் நூலுக்குச் சிறப்புப் பாயிரங் கூறினார் வேறு யாரும் இல்லாமையின்,உரையெழுதுவான் புகுந்த நக்கீரனாரே அதற்குப் பாயிரவுரை கூறியது வாய்வதேயாம். ஒரு நூலுக்கு உரைகூறப் புகுந்த ஆசிரியர் அந் நூலின் வரலாறு தெரிப்பதாகிய பாயிரம் மட்டுமே தமதுரையில் வரைகுவ ன்றித், தாம் அந்நூலுக்கு உரைவகுத்துவந்த வரலாறுந் தெரிப்பாரல்லர். ஆக்வே, நக்கீரனார், களவியலுக்கு முதற்கண் எழுதிய தமது பாயிரவுரையில், தாம் அந் நூலுக்கு உரையெழுதப் புக்க வரலாறுங் கூறுவரால்லர்; என்னை? அவ்வாறுரைப்பது தம்மைப் புகழ்தலாய் முடியுமாகலானும், நல்லிசைப்புலவர் அங்ஙனந் தம்மைப் புகழாராகலானும் என்பது. எனவே, நூல்வரலாறு தெரிக்கும் அப் பாயிரவுரையினிடையே, நக்கீரனாரது உரை வரலாறு

இறையனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/54&oldid=1590614" இலிருந்து மீள்விக்கப்பட்டது