உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

47

நூற்பாயிர வுரையிற் போந்தஉரைப் பகுதிகளைக் குறிக்கக் காண்டுமே யல்லாமல், உரைவரலாறு கூறும் பகுதியிலுள்ள வற்றைக் குறிக்கக் காணாமையின், அவை கொண்டு பாயிரவுரை முழுதும் நக்கீரனார் ஆக்கியதே யென்றல், அப் பாயிரவுரைப் பகுதிகளைப் பகுத்தாராய்ந்து பார்க்க மாட்டாதார் கூறும் பிழை பாட்டுரையேயாமென விடுக்க.

6

அற்றேல், இறையனாரகப் பொருள் முதற் சூத்திரத்திற்கு ஆசிரியர் நக்கீரனார் கூறிய நூற்பாயிர வுரையாவது எது? அதன்கட் பிறர் கூறிய உரைப்பாயிரவுரையாவது எது? என வினவின், அவை தம்மையும் பிரித்துக் காட்டுதும். நூற்பாயிர வுரையாவது: ஒரு நூல் செய்த ஆக்கியோன் பெயரும், அந் நூல் இன்ன நூலின் வழித்தாகச் செய்யப்பட்டதென அதன் வழியும், அஃது இன்ன எல்லைக்குள் வழங்குவதென அதன் எல்லையும், அந்நூலின் பெயர் இதுவென அதன் பெயரும், அது தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு' என ஆக்கப்படும் நால்வகையில் இன்னதுபற்றி யாக்கப் பட்டதென அதன் யாப்பும், அஃது இத்தகையதொரு பொருளை ளக்குவான் புகுந்ததென அது நுதலிய பொருளும், அஃது இன்னதோர் அவையகத்தே இத்துணைச் சிறந்த சான்றோராற் கேட்டு ஏற்கப்பட்டதென அதனைக் கேட்போரும், இந்நூல் கற்க இன்னபயன் உண்டாம் என அதன் பயனும், அஃது இயற்றப்பட்ட காலமும், அஃது அரங்கேறிய அவைக்களமும், அந்நூல் செய்யவேண்டிற்றாங் காரணமும் என அந் நூலைப் பற்றிய பதினொரு வரலாறுந் தெரிப்பதே ஒரு நூலுக்குப் பாயிரமாகும். இப்பதினொரு வரலாறுங் கூறும் பாயிரம் ஒரு நூலுக்கு இன்றியமையாச் சிறப்பிற்றாதல் நோக்கியே தொன்று தொட்டுவந்த தமிழாசிரியர் யிரமுகத்தான் அகன்ற தாயினும், பாயிரம் இல்லது பனுவ லன்றே”12 என்று கூறுவாராயினர்; அவர் கூறிய ஆணைகடவாதே நக்கீரனார் முதலாகவந்த உரையாசிரியரும் பிறருந் தாமெடுத்த நூற்கு முதலிற் பாயிரம் உரைத்தலை ஒரு பெருங்கடமையாக் கொண்டார். அறுபது சூத்திரங்களால் ஆகிய ‘இறையனாரகப் பொருள்' என்னும் அகப்பொருள் நூல், திருவாலவாய்க் கோயில் இறைவன் றிருவுருவப் பீடத்தின் கீழ் நின்றுந் தற்செயலாய்க் கிடைத்த மூன்று செப்பேடுகளில் எழுதப்பட்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/56&oldid=1590623" இலிருந்து மீள்விக்கப்பட்டது