உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

22. முச்சங்க வரலாறும்

தொல்காப்பிய காலமும்

நூல் வரலாறு தெரிக்கும் இப் பதினொன்றும் அல்லாத ஏனை உரைப்பாயிர வுரையெல்லாம் நக்கீரனார் தம் மாணாக்கர் வழிவந்த ஏனையொருவராற் றாம் கேட்டவாறே எழுதிச் சேர்க்கப்பட்டனவாகும். அங்ஙனஞ் சேர்க்கப்பட்டவை யாவையோவெனிற், கூறுதும்: தலைச்சங்க இடைச்சங்க கடை ச்சங்க வரலாறுகளை எடுத்துரைக்கும் பகுதிகள் அவ்வளவும் நக்கீரனார் எழுதியன ஆகா. என்னை? 'சங்கம்' என்னுஞ்சொற் றமிழ்ச்சொல் அன்மையானும், நக்கீரனார் காலத்தும் அவர்க்கு முன்னும் இருந்த சான்றோர்கள் எல்லாம் ‘மன்றம்’ ‘அம்பலம்’ ‘குழாம்' 'பொதியில்' என்னுந் தூய தமிழ்ச்சொற்களையே வழங்கினரன்றிச், ‘சங்கம் என்னுஞ் சொல்லை வழங்கக் காணாமையானும், முச்சங்க வரலாறு நக்கீரனாரே எழுதினராயின் அவருந் 'தலைமன்றம் 'இடைமன்றம்' முதலான தனித்தமிழ்ச் சொற்களினாலேயே அவை தம்மை வழங்கியிருப்பராகலானும் என்பது. அதுவேயுமன்றித், தலைச்சங்கத்தில் அகத்தியனாரும் சிவபெருமானும் முருகக்கடவுளும் இருந்து தமிழாராய்ந்தா ரென்னும் ஒரு கதையை, உலக இயற்கையொடு மாறுறாத நக்கீரனார் எழுதுவாரல்லர்; மேலுங், கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பழந்தமிழ்ப் பாட்டுகளில் எங்கும் அகத்தியனார் என்று ஓராசிரியர் இருந்தாரென்பதற்கு ஏதொரு சான்றும் இல்லாமை மேலே விளக்கிப் போந்தாமாகலானும், காணவுங் கருதவும் படாத முழுமுதற் கடவுளான சிவபிரானும் முருகவேளுந் தலைச்சங்கத்தில் ஏனைப் புலவரோடு ஒக்க வீற்றிருந்து தமிழாராய்ந்தார் என்னுங் கதை, புராணக் கதைகள் மிக்கெழுந்த கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின்னன்றி முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/58&oldid=1590633" இலிருந்து மீள்விக்கப்பட்டது